9 பிப்., 2011

அடுத்த ஊழல்: இஸ்ரோ அலை ஒதுக்கீட்டி​ல் ரூ.2 லட்சம் கோடி இழப்பு

டெல்லி,பிப்.9:தொலைத் தொடர்பு துறையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை கூறியது. இந்த விவகாரம் விசுவ ரூபம் எடுத்து நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போன்ற முறைகேடு மத்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவிலும் நடந்து இருப்பதை மத்திய தணிக்கை துறை கண்டு பிடித்து உள் ளது. தொலை தொடர்பு துறை போலவே இஸ்ரோவிலும் அலைவரிசை ஒதுக்கீடுகள் நடக்கின்றன. இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் உள்ள அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கின்றன. ரேடியோ, டி.வி., 3-ஜி, செல்போன் சேவை போன்றவற்றுக்கு இந்த அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்ய இஸ்ரோ ஆன்டிரிக்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி உள்ளது.

2005-ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆன்டி ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. ரூ.1000 கோடி மட்டுமே இதற்கு கட்டணமாக பெறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் மூலம் ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் தேவாஸ் நிறுவனத்துக்கு அலை வரிசை ஒதுக்கீடு முறையாக செய்யவில்லை. இதனால் இஸ்ரோவுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங் களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது.

இதற்காக ரூ.12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ.1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு 15 மெகாஹெட்ஸ் அலை வரிசைகளை 3-ஜி செல்போன் சேவைக்காக ஏலம் மூலம் விற்றது. அதில் மத்திய அரசுக்கு ரூ.67 ஆயிரத்து 719 கோடி வருமானம் கிடைத்தது.

15 மெகாஹெட்ஸ் அலை வரிசையில் ரூ.67 ஆயிரம் கோடி கிடைத்து இருக்கும் போது 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் பொது ஏலம் மூலம் விடாமல் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் மூலம் நேரடியாக அலைவரிசைகளை ஒதுக்கியதால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய தணிக்கை துறை கூறி உள்ளது.

பல நாடுகளில் இது போன்ற அலைவரிசைகளை பொது ஏலம் மூலமே விற் கின்றனர். ஆனால் இஸ்ரோ மட்டும் பொது ஏலத்துக்கு விடாமல் இழப்பை ஏற் படுத்தி இருப்பதாக தணிக்கை துறை கூறி உள்ளது. இஸ்ரோ நிறுவனம் மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த துறை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உள்ளது. அப்படி இருந்தும் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி இருப்பது எல்லோரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

இதில் ஊழல் ஏதும் நடந்திருக்குமா? என்று தெரியவில்லை. தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். எனவே பல்வேறு சந்தேகங் கள் எழுகின்றன. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்சினை போல இஸ்ரோ அலை வரிசை ஒதுக்கீடு பிரச்சினையும் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அடுத்த ஊழல்: இஸ்ரோ அலை ஒதுக்கீட்டி​ல் ரூ.2 லட்சம் கோடி இழப்பு"

Mohamed Ismail MZ சொன்னது…

ஊழலுக்கென்று ஒரு இணையம் நடத்த வேண்டும்...அதாவது ஊழலை வெளிக்கொணர ஒரு இணையம் நடத்த வேண்டும்...

கருத்துரையிடுக