10 பிப்., 2011

'2ஜி ஸ்பெக்ட்ரம்': டிபி ரியாலி்ட்டி உரிமையாளர் கைது

மும்பை,பிப்.10:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பால்வாவை சிபிஐ நேற்றிரவு மும்பையில் கைது செய்தது.

இதற்கு முன்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. ஆனால், இதை வாங்கிய ஸ்வான் நிறுவனம் பின்னர் அதில் 45 சதவீத பங்குகளை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எடில்சாட் நிறுவனத்துக்கு பல மடங்கு விலைக்கு விற்றது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஸ்வான் நிறுவனம் ரூ.1,537 கோடி விலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றது. அதன் பின்னர் அந்த நிறுவனம் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை ரூ.4,730 கோடிக்கு விற்றது. 55 சதவீத பங்கை தன்வசமே வைத்துக் கொண்டது.

மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்படும் 4வது நபர் பல்வா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தொலைத்தொடர்புத்துறை அதிகாரி சித்தார்த் பகுரியா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பல்வா பின்னர் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

ஸ்வான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று, தனது 60 சதவீத பங்கை டெலினார் என்ற நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது வாங்கிய ஸ்பெக்ட்ரத்தில் 60 சதவீதத்தை மட்டுமே 4 மடங்கு விலை வைத்து விற்றது. எனவே இதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த யுனிநார் நிறுவனம் இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'2ஜி ஸ்பெக்ட்ரம்': டிபி ரியாலி்ட்டி உரிமையாளர் கைது"

கருத்துரையிடுக