கெய்ரோ,பிப்:பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
300க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை அரபுலகின் மிகப் பெருமை வாய்ந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான தியாகம் செய்துள்ளனர்.
இத்தியாகிகளைக் குறித்த தகவல்களை ஆன்இஸ்லாம்.நெட் இணையதளம் வெளியிட்டு வருகிறது.
அஹ்மத் எஹாப்
கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. தன்னைப் போன்ற இளைஞர்கள் எகிப்தின் வீதிகளில் இறங்கி 30 வருட சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடுவதை கண்ணுற்றார்.
எழுச்சிப் போராட்டத்தின் துவக்கத்திலேயே ஆர்வத்துடன் கலந்துக்கொண்டார் எஹாப்.
போராட்டத்தில் முக்கிய பங்காற்றவேண்டும் என தீர்மானித்திருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து தஹ்ரீர் சதுக்கத்திற்கு முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றுக் கொண்டிருந்தார்.
தஹ்ரீர் சதுக்கத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கஸ்ர் எல்-நில் பாலத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான எகிப்திய கலவரத் தடுப்புப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எஹாபையும் போராட்டத்தில் கலந்துகொள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் செல்ல வந்த மக்களையும் தடுத்து நிறுத்தினர்.
போலீசாரின் தடையையும் மீறி தடுப்புகளை தாண்ட எஹாப் முயன்றபோது மூன்று முறை சுடப்பட்டு மரணமடைந்தார்.(இன்னாலில்லாஹி...). இதன் மூலம் எகிப்து புரட்சியின் முதல் உயிர்தியாகியாக மாறினார் எஹாப்.
ஆன்இஸ்லாம்.நெட்

0 கருத்துகள்: on "எகிப்து எழுச்சியின் உயிர் தியாகிகள் - 2"
கருத்துரையிடுக