வராய்ப்பூர்,பிப்.10:பிரபல மருத்துவரும், மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் பினாயக்சென்னை உடனடியாக விடுதலைச் செய்யக்கோரி 12 நாடுகளைச் சார்ந்த நோபல் பரிசு பெற்ற 40 அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு நோபல் பரிசுப் பெற்ற இந்திய வம்சாவழியைச் சார்ந்த வெங்கிட்ராமன் ராமகிருஷ்ண்ன், பொருளாதாரத்திற்கு நோபல் பரிசுப்பெற்ற இந்தியாவைச் சார்ந்த டாக்டர்.அமர்த்தியா சென் ஆகியோரும் இக்கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
1965-ஆம் ஆண்டு நோபல் பரிசுப் பெற்ற மருத்துவ விஞ்ஞானி பிரான்சைச் சார்ந்த பிராங்கோ ஜேக்கப் என்பவர்தான் இக்கடிதத்தில் கையெழுத்திட்ட வயது(91) முதிர்ந்தவர். சிறுநீரக மாற்று அறுவை சிகிட்சையை முதன் முதலாக நடத்திய ஜோசஃப் முர்ரே, ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்த சாமுவேல் ப்ளூம்பெர்க் ஆகியோரும் இதில் அடங்குவர்.
இந்திய சட்டங்களின்படி விரைவில் அவருடைய ஜாமீன் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பினாயக்சென்னுக்கு ஆயுள்தண்டனை விதித்ததற்கு இவர்கள் தங்கள் கவலையையும், நிராசையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பினாயக்சென்.நெட் என்ற இணையதளத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்ய நோபல் பரிசுப் பெற்ற 40 அறிஞர்கள் கோரிக்கை"
கருத்துரையிடுக