13 பிப்., 2011

எகிப்து புரட்சி ஏற்படுத்தி​ய அச்சம்: பஹ்​ரைனில் குடும்பத்தி​ற்கு ஆயிரம் தினார் வழங்கும் மன்னர்

மனாமா,பிப்.13:துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சம் அரபுலக ஆட்சியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பஹ்ரைன் நாட்டில் வருகிறது 14-ஆம் தேதி ஷியா ஆதரவு எதிர்கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா வருகிற வெள்ளிக்கிழமை பஹ்ரைன் நாட்டைச் சார்ந்த குடும்பம் ஒன்றிற்கு ஆயிரம் தினார்(2650 அமெரிக்க டாலர்) வீதம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில அரபு நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. இங்கு ஷியா முஸ்லிம்களுக்கும் ஆளுங்கட்சியினரிடையே வழக்கமாக பெருமளவிலான மோதல் இல்லை என்றாலும், கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலின்போது மோதல் நிகழ்ந்தது. பஹ்ரைனில் பாராளுமன்ற முறை உள்ளது. இருந்தபோதிலும், ஷியா முஸ்லிம்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் தேவைகளில் போதிய முன்னேற்றம் இல்லை என கருதுகின்றனர்.

துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்த எழுச்சியைத் தொடர்ந்து அண்மைக்காலங்களில் பல சலுகைகளை பஹ்ரைன் அரசு தங்களது குடிமக்களுக்கு அறிவித்திருந்தது. சமூக சேவைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆகஸ்ட் மாதம் கைதுச் செய்யப்பட்ட ஷியா மாணவர்கள் விடுதலை என பல அறிவிப்புகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:ராய்ட்டர்ஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து புரட்சி ஏற்படுத்தி​ய அச்சம்: பஹ்​ரைனில் குடும்பத்தி​ற்கு ஆயிரம் தினார் வழங்கும் மன்னர்"

கருத்துரையிடுக