12 பிப்., 2011

இனி இஸ்ரேலும், அமெரிக்காவும் இல்லாத மேற்காசியா - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,பிப்.12:அமெரிக்காவும், இஸ்ரேலும் இல்லாத மேற்காசியா எதிர்காலத்தில் உருவாகும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அறிவித்துள்ளார்.

'எத்தனை தந்திரங்களை கையாண்டாலும் மக்கள் புரட்சியின் மூலமாக அமெரிக்காவும், சியானிஷ நாடும் இல்லாத ஒரு மேற்காசியாவை உருவாக்கலாம் என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியும்' - ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 32-வது நினைவு தினத்தையொட்டி டெஹ்ரானின் ஆசாத்(சுதந்திர) சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.

'இப்பிராந்தியத்தில் எகிப்து மற்றும் துனீசியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது. ஆஃப்கானில் இவர்கள் என்னச் செய்தார்கள்? இப்பிராந்தியத்தில் ஏன் இவர்கள் ராணுவ தளங்களை அமைக்கின்றார்கள்?' -நஜாத் கேட்கிறார்.

இரண்டு நாடுகள் என்று கூறும் பொழுதே இஸ்ரேலின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா செயல்படுவதாக நஜாத் குற்றஞ்சாட்டினார்.

எகிப்திய புரட்சியை வாழ்த்திய நஜாத், எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். சுதந்திரத்தை பெறுவது உங்களுடைய உரிமையாகும். உங்களை ஆட்சிபுரிபவர் யார்? என்பதை தீர்மானிக்க வேண்டியதும் நீங்களே!

சுதந்திர நாட்டைக் குறித்தும், உலக நாடுகளைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஊழல் அரசாங்கத்தை எதிர்த்து அஞ்சாமல் உறுதியுடன் நில்லுங்கள்.வெற்றி உங்களின் அருகில் உள்ளது' என நஜாத் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட எகிப்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இனி இஸ்ரேலும், அமெரிக்காவும் இல்லாத மேற்காசியா - அஹ்மத் நஜாத்"

கருத்துரையிடுக