கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் தனக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு செல்லவிருப்பதாக ஜெர்மனியிலிருந்து வெளியாகும் ஸ்பீகல் பத்திரிகை தெரிவிக்கிறது.
மருத்துவ சோதனை என்ற பெயரில் முபாரக் வெளியேறவிருப்பதாகவும், இதற்காக ஜெர்மனியில் ஆடம்பர க்ளீனிக்கில் தங்க விருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
இதுக்குறித்து அமெரிக்க அரசும் முபாரக் அரசும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. முன்பு ஈரானில் புரட்சி ஏற்பட்ட பொழுது அந்நாட்டு சர்வாதிகாரி ஷா பஹ்லவி மருத்துவ சிகிட்சை என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:கல்ஃப் நியூஸ்

0 கருத்துகள்: on "முபாரக் எகிப்தை விட்டு வெளியேறப் போவதாக ஜெர்மன் பத்திரிகை"
கருத்துரையிடுக