13 பிப்., 2011

முபாரக்கின் வீழ்ச்சி:உலகின் கவனத்தை ஈர்க்கும் அல்ஜஸீராவும், கத்தரும்

தோஹா,பிப்.13:அன்வர் சதாத்தின் கொலைக்குப் பிறகு எதிரிகள் இல்லாத 30 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சிபுரிந்த ஹுஸ்னி முபாரக்கின் எதிர்பாராத வீழ்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது அல்ஜஸீராவும், கத்தர் நாடும்.

துனீசியாவில் துவங்கிய அரபு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் உத்வேகத்தை ஊட்டியது அல்ஜஸீரா தொலைக்காட்சியாகும். அரசு இயந்திரங்களை உதறித் தள்ளிவிட்டு சூடான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அல்ஜஸீரா முன்னணியிலிருந்தது.

அல்ஜஸீராவின் நேரடியான ஒளிபரப்பு ஆபத்து என்பதை உணர்ந்த எகிப்து அதிகாரிகள் அல்ஜஸீராவின் அலுவலகத்தை இழுத்து மூடினர். அதன் பத்திரிகையாளர்களை கைதுச் செய்தனர். ஆனால், அதற்கு முன்பு எகிப்து நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்ட அல்ஜஸீரா சேனல், மக்கள் ஆதரவு செய்திகளை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரபு வீதிகளை இதுவரை மூடி மறைத்துவந்த மேற்கத்திய ஊடகங்கள் கூட வேறு வழியின்றி அல்ஜஸீராவின் செய்திகளைப் போல அளிக்கத் துவங்கின. அதேவேளையில், கத்தரின் உறுதியான நிலைப்பாடும் இவ்வேளையில் முக்கியத்துவம் பெறுகிறது.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தை எகிப்து அரசு மதிக்கவேண்டும் என கத்தர் கருத்து தெரிவித்தது. எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து கத்தரில் உள்ள மஸ்ஜிதுகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கத்தரில் வசித்துவரும் எகிப்து நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் யூசுஃப் அல் கர்தாவி தனது ஜும்ஆ உரைகளில் கடுமையாக ஹுஸ்னி முபாரக்கை விமர்சித்தார்.

எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பகிரங்கமாகவே தனது உறுதியான ஆதரவை தெரிவித்தார். அரபு சமூகத்தின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உத்வேகமளித்துக் கொண்டிருக்கும் அல்ஜஸீராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கத்தருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது எகிப்திய அரசு.

முபாரக்கின் கோடிக்கணக்கான பணம் ஊழலைக் குறித்து அல்ஜஸீரா வெளியிட்டதால் கத்தர் அரசை அவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முபாரக்கின் வீழ்ச்சி:உலகின் கவனத்தை ஈர்க்கும் அல்ஜஸீராவும், கத்தரும்"

கருத்துரையிடுக