கெய்ரோ,பிப்.13:ஹுஸ்னி முபாரக் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அதிகாரத்தை ராணுவத்திடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து எகிப்தில் இஸ்ரேலின் தூதரகம் மூடப்பட்டது.
முபாரக் ராஜினாமாச் செய்வதைத் தொடர்ந்து என்ன நிகழும் என்பதை தற்போது ஊகிக்க முடியாது என மூத்த இஸ்ரேல் அதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முபாரக் அதிகாரத்தை தன்தாவி தலைமையிலான ராணுவத்திடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது.
அதிகாரத்தை ஹுஸ்னி முபாரக் ராணுவத்திடம் ஒப்படைத்த பிறகும் மக்கள் கெய்ரோவில் போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த கெய்ரோவில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி மக்கள் பேரணி நடத்தினர். அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரை முன்னரே அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேல் தூதரகம் மூடப்பட்டது"
கருத்துரையிடுக