8 பிப்., 2011

ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக இஸ்ரேலிலும் பேரணி

ஜெருசலம்,பிப்.8:எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமெனக் கோரி அந்நாட்டில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிலும் பேரணி நடைபெற்றது.

மனித உரிமை ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்துக் கொண்டனர். முபாரக்கின் ராஜினாமாவைக் கோரி நாசரேத்தில் பலாத் கட்சியினர் ஏற்பாடுச்செய்த இப்பேரணியில் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹனின் சுஅய்வி, ஜமால் ஸஹல்க்கா ஆகியோர் பங்கேற்றனர் என வைநெட் கூறுகிறது.

'முபாரக் வெளியேறு!' என எழுதப்பட்ட அட்டைகளை பிடித்தவாறு பேரணி நடைபெற்றது. எகிப்து மற்றும் இதர அரபு நாடுகளில் நடைபெறும் எழுச்சி போராட்டங்களுக்கு தமது கட்சியின் பூரண ஆதரவு உண்டு என இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் ஸஹல்கா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக இஸ்ரேலிலும் பேரணி"

கருத்துரையிடுக