7 பிப்., 2011

அமெரிக்க ரஷ்ய அணுவாயுத உடன்படிக்கை அமுலுக்கு வருகிறது

முனிச்,பிப்.7:அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட 'நியு ஸ்ரார்ட்' அணுவாயுத ஒப்பந்தமானது அமுலுக்கு வரவுள்ளது.

இருநாடுகளின் அணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்காக கையெழுத்திடப்பட்ட 'நியு ஸ்ரார்ட்' உடன்படிக்கையானது அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

முனிச் நகரில் நடைபெற்ற மாநாடொன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜிலங் ரோவ் ஆகியோர் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை தமக்கிடையில் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

1991 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 'ஸ்ரார்ட்' உடன்படிக்கையானது 2009 டிசம்பர் மாதம் காலாவதியானதைத் தொடர்ந்து அதற்குப் பதிலாக 'நியு ஸ்ரார்ட்' என்னும் புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க செனட் சபையிலும் கடந்த மாதம் ரஷ்யப் பாராளுமன்றத்திலும் இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு கொள்கை தொடர்பான முனிச் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்ததேவ் ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

சர்வதேச பாதுகாப்பை அதிகரிப்பதற்கான ஒரு ஒப்பந்தமாகவே இது ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இருநாடுகளிலும் குண்டு வீச்சு விமானங்கள்,ஏவுகணைகள் மற்றும் அணு நீர் மூழ்கிக்கப்பல்கள் உள்ளிட்ட அணுவாயுத உபகரணங்களின் பாவனையை குறைப்பதை கண்காணிப்பதாகவும் இது அமையும்.

அத்துடன் குறித்த இருநாடுகளும் தமக்கிடையே மற்றைய நாட்டின் அணுவாயுத உற்பத்தி தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பி.பி.சி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க ரஷ்ய அணுவாயுத உடன்படிக்கை அமுலுக்கு வருகிறது"

கருத்துரையிடுக