8 பிப்., 2011

எஸ்.டி.பி.ஐ மேற்கு வங்காள மாநில மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெர்ஹாம்பூர்,பிப்.8:சோசியல் டெமோக்ரேடி பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) மேற்கு வங்காள மாநில முதல் மாநாடு அம்மாநிலத்தின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான முர்ஷிதாபாத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பெண்கள் உள்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். மாநில எஸ்.டி.பி.ஐ தலைவர் தயீதுல் இஸ்லாம் இம்மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

தேசிய தலைவர் இ.அபூபக்கர் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், 'இந்தியாவில் ஒருபுறம் அரசியல் தலைவர்கள் நாட்டை கொள்ளையடிக்கும்போது மறுபுறம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச் செயலாளர்களான எ.ஸயீத், முஹம்மது உமர்கான், ஹாஃபிஸ் மன்சூர் கான், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மெளலவி உஸ்மான் பேக் , எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஆலியா ஃபர்வீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் ஷஹாபுத்தீன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

மேற்கு வங்காள தலித் சேனா தலைவர் சுதீப் பிஸ்வாஸ் தனது கட்சியை கலைத்துவிட்டு எஸ்.டி.பி.ஐயில் இணைவதாக மாநாட்டில் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எஸ்.டி.பி.ஐ மேற்கு வங்காள மாநில மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு"

கருத்துரையிடுக