லண்டன்,பிப்.10:தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் சுவிடனுக்கு நாடு கடத்தும் விசயங்கள் அனைத்தும் தவறானவை என்று ஜூலியன் அஸான்ஜே தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள பெல் மார்ஷ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அஸான்ஜே மீதான சுவீடனுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை நேற்று இரண்டாவது நாளாக நடந்தது.
முதல் நாள் விசாரணையில், அஸான்ஜேவின் வக்கீல்கள் கூறியதாவது: 'அவர் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டால் என்றால், சுவீடன் அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்றனர்.

அமெரிக்கா அவரை குவான்டனமோ சிறைக்கு அனுப்பும் அல்லது மரண தண்டனை அளிக்கும் என்று வாதிட்டனர். அவர்களின் வாதத்தை மறுத்த சுவீடன் தரப்பு வக்கீல், "அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தமாட்டோம். அப்படியே ஒரு முயற்சி நடந்தாலும் அதில், பிரிட்டன் தலையிட்டு தடுக்க வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
இதற்கிடையில் முதல் நாள் விசாரணை முடிந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஸான்ஜே, "கடந்த ஐந்து மாதங்களாக என் வாழ்க்கை ஒரு கறுப்புப் பெட்டிக்குள் திணிக்கப்பட்டுள்ளது. அப்பெட்டியின் மீது கற்பழிப்பு என்ற குற்றச்சாட்டு ஒட்டப்பட்டிருந்தது. இப்போது, அப்பெட்டி கோர்ட்டால் திறக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பது நிரூபிக்கப்படும்" என்றார்.

0 கருத்துகள்: on "குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை: ஜூலியன் அஸான்ஜே"
கருத்துரையிடுக