14 மார்., 2011

"தூதுஆன்லைன்.காம்" உதய விழா மற்றும் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!

அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)

இன்ஷா அல்லாஹ், வருகிற மார்ச் 15ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.

அத்தோடு பாலைவனத்தூது நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.

இதுவரை பாலைவனத்தூது வலைப்பூவில் 7,000-த்திற்கும் மேற்பட்ட செய்திகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன!. ஏப்ரல் 2009 முதல் தற்போது வரை, சுமார் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வருகைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த சந்தோஷமான தருணத்தில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றோம்.

பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

பாலைவனத் தூதுக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் அருமைச் சகோதரர்களின் இம்மை, மறுமை வெற்றிக்காக வல்ல இறைவனிடம் இதயங்கனிந்து இறைஞ்சுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தூது குடும்பம்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 கருத்துகள்: on ""தூதுஆன்லைன்.காம்" உதய விழா மற்றும் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!"

Unknown சொன்னது…

Ungal muyarchikkum, uzhaippukkum ellam valla allah eerulagilum vetriyai thandarulvanaha aamin.......

Haja TP.

ibrahim சொன்னது…

maasaa allah mehaum maheljeyana news uggal muyarje vetrie ataiya allah uthave burevaanaaha immaium marumaielum narkulitharuvaanaaha aamin

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் உங்கள் இந்த நற்பணி சிறக்க இறைவனிடம் துவா செய்தாததவனாக…………

பெயரில்லா சொன்னது…

தொடர்ந்து தூது தனது பணியை ஆற்றிவர வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

கூத்தாநல்லூர் முஸ்லிம் சொன்னது…

அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. Al-Quran 8:60

பாலைவனத்தில் இருந்து தூது சொல்லி கொண்டு இருக்கும் எனது சகோதரர்களுக்கு அல்லாஹ் என்றும் உதவி புரிவானாக ஆமீன்....

KOOTHANALLUR MUSLIMS
www.koothanallurmuslims.com

faizeejamali சொன்னது…

Allah ungal muyarhi yai etru kolvaanage.

கருத்துரையிடுக