கார்த்தூம்,பிப்.12:தெற்கு சூடானில் சில கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ள ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையேயான மோதலில்
நூறுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாரம் நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், 39 சிவிலியன்கள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டதாக சூடான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் மூலமாக சூடான் சுதந்திர நாடாக மாறப்போகும் சூழலில் ஜார்ஜ் ஆதர் தலைமையிலான கிளர்ச்சியாளர்களும், ராணுவமும் மீண்டும் மோதலை துவக்கியுள்ளன.
மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் 99 சதவீதம் பேரும் தெற்கு சூடான் சுதந்திர நாடாக மாற வாக்களித்திருந்தனர். தெற்கு சூடானில் நடந்த விருப்ப வாக்கெடுப்பினையொட்டி கிளர்ச்சியாளர்கள் அரசுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சூடானில் மோதல்-100 பேர் மரணம்"
கருத்துரையிடுக