தற்காப்பிற்காக சுட்டதாக கூறும் டேவிஸின் வாதத்தை தள்ளுபடிச் செய்த பாகிஸ்தானின் லாகூர் போலீஸ் தலைவர் அஸ்லம் தஹ்ரீர், குற்றவாளி வேண்டுமென்றே துப்பாக்கியால் சுட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்காப்பிற்காகத்தான் சுட்டேன் என்ற அவருடைய வாதத்தை புலனாய்வு அதிகாரிகள் முன்னால் அவரால் நிரூபிக்க இயலவில்லை என தஹ்ரீர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டேவிஸை பாகிஸ்தானின் உள்ளூர் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. டேவிஸை பலத்த பாதுகாப்புடன் நேற்று ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இம்மாதம் 25-ஆம் தேதி நடைபெறும். டேவிஸ் கோட்லாக் சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த மாதம் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் வைத்து டேவிஸ் இரண்டு பாகிஸ்தானிகளை சுட்டுக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து டேவிஸை நோக்கி வந்த மற்றொரு பாகிஸ்தானியை டேவிஸ் அமெரிக்க தூதரக அதிகாரி காரால் மோதி கொலைச் செய்துள்ளார். தன்னிடம் வழிப்பறிக் கொள்ளை நடத்த முயன்ற இருவரையும் தற்காப்பிற்காக சுட்டதாக டேவிஸ் தெரிவித்திருந்தார்.
சூழ்நிலை ஆதாரங்களும், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் டேவிஸின் கூற்றை மறுப்பதாக அமைந்துள்ளன என லாகூர் போலீஸ் கூறுகிறது.
ஃபாரன்சிக் அறிக்கையில் தற்காப்பிற்காக டேவிஸ் துப்பாக்கியை எடுத்ததாக கூறப்படுவது நிராகரிக்கப்பட்டுள்ளது. டேவிஸிற்கு எதிராக நேரடி சாட்சிகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களிலிருந்து 10 துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் டேவிஸ் இருவரையும் கொல்ல வேண்டுமென செயல்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளதாக லாகூர் போலீஸ் விளக்கமளித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாக்.:அமெரிக்க தூதரக அதிகாரி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைப்பு"
கருத்துரையிடுக