8 பிப்., 2011

முஷாரஃப் மீது ஷூ வீச்சு

லண்டன்,பிப்.8:பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஷூ வை வீசியெறிந்தார்.

ஆல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியில்தான் ,முஷாரஃப் உரை நிகழ்த்தினார். வீசப்பட்ட ஷூ முஷாரஃபை தாக்கவில்லை. ஷூ எறிந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைதுச் செய்தனர்.

அமெரிக்க சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டிருக்கும் பெண் மருத்துவர் ஆஃபியா சித்தீக்கியை விடுதலைச் செய்யவேண்டுமென ஷூவை எறிந்த நபர் முழக்கமிட்டார்.

ஷூ எறிவதை சந்திக்கும் உலகின் ஐந்தாவது பிரபல தலைவர் முஷாரஃப் ஆவார். இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜார்ஜ் w புஷ், இந்தியாவின் ப.சிதம்பரம், பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி, சீன பிரதமர் வென் ஜியாபோவா ஆகியோர் மீது ஷூ வீசப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஷாரஃப் மீது ஷூ வீச்சு"

கருத்துரையிடுக