8 பிப்., 2011

மருந்துகள் இல்லை:துயரத்தில் ஃபலஸ்தீன் மக்கள்

காஸ்ஸா,பிப்.8:இஸ்ரேலின் கொடூரமான தடையால் ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

170 வகை மருந்துகள் மற்றும் 140 வகை மாத்திரைகள் தற்பொழுது கிடைக்கவில்லை என காஸ்ஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருந்து கிடைக்காமல் நோயாளிகள் மரணித்தால் அதற்கு பொறுப்பு இஸ்ரேலும், ஃபலஸ்தீன் மஹ்மூத் அப்பாசின் ஆணையமும்தான் என அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் காஸ்ஸாவிற்கு வெளியே செல்ல தடை விதித்திருப்பதால் வெளியேக் கொண்டுசென்று சிகிட்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. வெளியே சென்று சிகிட்சைப் பெறுவதற்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அனுமதி கிடைக்கும் முன்பே பல இறந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மருந்துகள் இல்லை:துயரத்தில் ஃபலஸ்தீன் மக்கள்"

கருத்துரையிடுக