சென்னை,பிப்.11:வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில், அவர்களுக்காக ஒரு நல நிதியத்தை உருவாக்க தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
வரலாற்றின்படி தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் வெளிநாடுகளுக்கு சென்றனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலகமயமாக்கப் பட்டதன் காரணமாகவும் வேலை தேடி அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
இதன் காரணமாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைத்துக் கொள்ளாத, வேலையில் இருக்கும் போதும் அதற்கு பிறகும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்சனைகளையும், சட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பெற்று வந்து வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி செல்ல தன்னை சார்ந்து இருப்பவர்களை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு வேலை தேடிச்செல்வோர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு அவர்களால் தீர்வு காணவும் முடியவில்லை.
எனவே தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைக்காத தமிழர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் சமூக பாதுகாப்பு வழங்குவது முக்கிய கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.
வெளிநாட்டில் இறக்கும் தமிழர்களின் உடல்களை தாயகத்துக்கு திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதி உதவி வழங்குவதோடு அதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தீர்வு செய்தாலும் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும்.
இந்தக் குறைகளை தீர்க்கவும், அவர்கள் தொடர்பு கொள்வதற்கு தமிழக அரசின் கீழ் தனியாக ஒரு அமைப்பு இல்லாத பெரிய குறையாக உள்ளது.
எனவே வெளிநாடு, வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி அதன்கீழ் ஒரு நல நிதியத்தை ஏற்படுத்தி அந்த திட்டத்தை செயல்படுத்தி நிர்வகிக்க ஒரு வாரியத்தையும் நிறுவ உள்ளோம்.
இந்த நோக்கத்திற்காக அரசு ஒரு சட்டத்தை கொண்டு வருவது என முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
thatstamil

0 கருத்துகள்: on "வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவ நல வாரியம்: சட்டசபையில் மசோதா தாக்கல்"
கருத்துரையிடுக