கெய்ரோ,பிப்.11:மக்கள் எழுச்சியின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துவருவதாக செய்திகள் கூறுகின்றன.
இன்று இரவு அவர் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திவிட்டு ராஜினாமாவை அறிவிப்பார் எனக் கருதப்படுகிறது. ஆனால், இச்செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்படவில்லை. முபாரக் இன்று ராஜினாமாச் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக சி.ஐ.ஏவின் தலைவர் கூறியுள்ளார்.
ராணுவம் மக்களுடன் சேர்ந்துள்ளதாகவும், நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "முபாரக் பதவி விலக தயாராகிறார்"
கருத்துரையிடுக