12 பிப்., 2011

விக்கிலீக்ஸ்:ஈராக்கில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவிடம் ஹுஸ்னி முபாரக் தெரிவித்தார்

லண்டன்,பிப்.12:ஈராக் விவகாரத்தில் தலையிடாதீர்கள் என ஹுஸ்னி முபாரக் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் தலையிட்டால் அங்கிருந்து அமெரிக்காவால் தப்பிக்க வியலாது என ஹுஸ்னி முபாரக் தெரிவித்ததாக அமெரிக்க தூதரக செய்திகளை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

சதாம் ஹுசைனை பதவியிலிருந்து இறக்காதீர்கள் எனவும் முபாரக் தெரிவித்திருந்தார். முன்னாள் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியிடம் மூன்று அல்லது நான்கு தடவை முபாரக் இதனை தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க வட்டாரங்கள் முபாரக்கின் எச்சரிக்கையை நிராகரித்தன.

இச்செய்தியை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி டெய்லி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு கெய்ரோவில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் முபாரக் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது.

ஜார்ஜ் புஷ் சீனியர் எனது பேச்சைக் கேட்பார், ஆனால் அவரது மகனோ அவ்வாறல்ல என முபாரக் தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி 14-ஆம் தேதி அமெரிக்க தூதரக ஆவணங்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.

மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:ஈராக்கில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவிடம் ஹுஸ்னி முபாரக் தெரிவித்தார்"

கருத்துரையிடுக