12 பிப்., 2011

அப்சல்குரு வேறு சிறைக்கு மாற்றம்? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,பிப்.12:நாடாளுமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையிலிருக்கும் அப்சல் குருவை ஜம்மு காஷ்மீர் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக அரசின் கருத்தைத் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அப்சல்குரு மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரம் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையான மக்களின் மனசாட்சிக்கு இணங்க அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இருப்பினும் அவரது கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் தன்னை ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைக்கு மாற்றுமாரு கோரி உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அப்சல் குரு. இந்த மனு நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோரடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ஜம்மு காஷ்மீர் அல்லாத வேறு மாநில ஜெயிலுக்கு மாற்றலாமா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

பஞ்சாப் மாநிலம் பதான் கோட் சிறைக்கு மாற்றினால் வசதியாக இருக்கும் என்று அப்சல் குரு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காமாக்ஷி சிங் தெரிவித்தார்.

தனது குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்து செல்வது சிரமமாக உள்ளது என்றும் தனக்கு 11 வயது மகனும் 80 வயது தாயும் உள்ளதாக மனுவில் அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு வந்து செல்லும் செலவை ஏற்கக் கூடிய நிலையில் தனது குடும்பம் இல்லை என்றும், ஒருவேளை மாற்ற முடியவில்லையெனில் குடும்பத்தினர் டெல்லிக்கு வந்து செல்வதற்குரிய பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்று அப்சல் குரு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அப்சல் குருவின் கருணை மனு என்னவாயிற்று? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, அது கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

அப்சல் குருவின் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், குற்றவாளியின் கோரிக்கையை ஏற்று வேறு சிறைக்கு மாற்றுவதற்கு விதிமுறைகள் உள்ளனவா? என்று அரசு வழக்கறிஞரைக் கேட்டார்.

இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்சல்குரு வேறு சிறைக்கு மாற்றம்? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்"

கருத்துரையிடுக