12 பிப்., 2011

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மறுப்பு

பெங்களூர்,பிப்.12:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.

அரசுத் தரப்பு வாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம் வழக்கின் முக்கியத்துவம், தேச நலன் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு ஜாமீனை மறுப்பதாக தெரிவித்துள்ளது.

நீதிபதி வி.ஜெகன்னாதனின் பெஞ்ச்தான் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலித்தது. இத்தகைய வழக்குகளில் அதிக ஆழமாக செல்ல தற்போது இயலாது. இவ்வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லையெனினும், தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் ஆகிய முதல் நோக்கு சாட்சி(prima facie)யை பரிசீலனைக்கு எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

அதேவேளையில், மஃதனிக்கு தேவையான மருத்துவ சிகிட்சை அளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மறுப்பு"

கருத்துரையிடுக