10 பிப்., 2011

துபாய்:மஸ்ஜிதில் சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி

துபாய்,பிப்.10:கடந்த நவம்பர் 2009-ம் ஆண்டு ஈத்பெருநாள் தினம். பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த 4 வயது பாலகனை ஏதோ பரிசு தருவதாக அல்குஸைஸிலுள்ள மஸ்ஜிதுக்கு அழைத்துவந்த யு.ஏ.இ குடிமகனான 31 வயது ராஷித் ருபை அல் ரஷீதி, பின்னர் அங்குள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்று காமவெறி தலைக்கேறி அந்த பாலகனை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதோடு அச்சிறுவனின் தலையை பிடித்து தரையில் மோதச்செய்து கொடூரமாக கொலைச் செய்துள்ளார்.

இத்தகைய கொடூரமான குற்றத்தைப் புரிந்த மீனவரான யு.ஏ.இ குடிமகனுக்கு கீழ் நீதிமன்றங்கள் மரணத்தண்டனை விதித்தன. மேல் நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்த குற்றவாளியின் தரப்பு அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கருணை காண்பிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தது.

ஆனால், ராஷித் மருத்துவமனையின் மனோதத்துவ துறை குற்றவாளிக்கு மனோநிலை எதுவும் பாதிக்கப்படவில்லை. தெளிவாக இருப்பதாக சான்றழித்தது. இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு கருணை காண்பிக்க முடியாது, ஏனெனில் இவர்அச்சிறுவனிடம் கருணை காண்பிக்கவில்லை எனக்கூறி மரணத்தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளித்தார்.

அதனடிப்படையில் இன்று அதிகாலை குற்றவாளிக்கு துப்பாக்கியால் சுட்டு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரணத்தண்டனை நிறைவேற்றப்படும் பொழுது துபாய் முஃப்தி, துபாய் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர். மேலும் கொலைச் செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரும் இருந்தனர். மரணத்தண்டனையை நிறைவேற்றும் முன்னால் குற்றவாளி பிரார்த்தனையைச் செய்துவிட்டு இறைவனிடமும், சிறுவனின் பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டார்.

செய்தி:கலீஜ் டைம்ஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "துபாய்:மஸ்ஜிதில் சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி"

ibrahim சொன்னது…

சரியான தீர்பு தீர்பு கொடுத்தவருக்கு இறைவன் நற் கூலிதருவானாஹ

Abu Faheem சொன்னது…

இது போன்ற சரியான தீர்ப்புகள் தான் குற்றங்களை தடுக்கஉதவும் என்பது தற்போது அனைவரும் அனைத்து மதத்தினரும் புரிந்துகொண்டுள்ளனர் இதுவே இந்தியாவின் சட்டமாகும் நாட்கள் வெகுதொலைவிலில்லை இன்ஷாஅல்லாஹ்.
அபு ஃபஹீம் -ரியாத்

கருத்துரையிடுக