ராய்ப்பூர்,பிப்.10:மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவமருமான பினாயக் சென் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சட்டீஷ்கர் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.
மாவோயிஸ்டுகளுடன் பினாயக் சென்னிற்கு தொடர்புக் குறித்து எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்க அரசால் இயலவில்லை. ஆதலால், பினாயக் சென்னிற்கு ஜாமீன் அனுமதிக்க வேண்டுமென அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
ஆனால், உயர்நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடிச் செய்துவிட்டது. ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பினாயக்சென்னை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டுமென உலகெங்கிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் நோபல் பரிசுப்பெற்ற அறிஞர்கள் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தொடரும் அநீதி:பினாயக் சென்னின் ஜாமீன் மனு தள்ளுபடி"
கருத்துரையிடுக