10 பிப்., 2011

கேரளா:போலீஸ் காவலில் சித்திரவதை - எஸ்.டி.பி.ஐ தொண்டர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

திருச்சூர்,பிப்.10:கேரள மாநிலம் மதிலம் என்ற ஊரில் சி.பி.எம் கட்சியின் அலுவலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.டி.பி.ஐ தொண்டர் அர்ஷாத்(வயது 22) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ஷாத் மதிலகம் என்ற இடத்தில் எஸ்.டி.பி.ஐயின் கிளைக் கமிட்டியின் துணைத் தலைவராவார். 3 தினங்களுக்கு முன்பு கொடுங்கல்லூர் போலீஸ் வட்டார ஆய்வாளர் தேவஸியா அர்ஷாதை கைதுச் செய்தபோதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. தேவஸியா தலைமையில் போலீசார் கடந்த 3 தினங்களாக அர்ஷாதை சித்திரவதைக்கு ஆளாக்கியதாக எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

௬எஸ்.டி.பி.ஐயின் கொடியை சி.பி.எம் குண்டர்கள் தீவைத்துக் கொளுத்தியதைத் தொடர்ந்து சி.பி.எம் அலுவலகம் தாக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரளா:போலீஸ் காவலில் சித்திரவதை - எஸ்.டி.பி.ஐ தொண்டர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி"

கருத்துரையிடுக