நியூயார்க்,பிப்.10:விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சே சட்டரீதியாக சிக்கவைக்க அமெரிக்கா நடத்திய முயற்சி தோல்வியை சந்திக்கிறது.
அமெரிக்க அரசின் ஆவணங்களை கசியவிட அமெரிக்க ராணுவ பகுப்பாய்வாளர் பிராட்லி மானிங்கிற்கு அஸாஞ்ச் நிர்பந்தம் அளித்தார் என்பதை நிரூபிக்க அரசுத்தரப்பால் இயலவில்லை.
அஸாஞ்சிற்கு அமெரிக்க ரகசிய ராணுவ ஆவணங்களை கசியவிட்டார் எனக் குற்றஞ்சாட்டி பிராட்லி மானிங் தற்போது வெர்ஜீனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மானிங் சுயமாக முயற்சி மேற்கொண்டுதான் அமெரிக்க ரகசிய ஆவணங்களை கசியவிட்டார் என்பதை புதிய ஆதாரங்கள் நிரூபிப்பதாக தொடர்புடைய அதிகாரிகள் வால்ஸ்ட்ரீர் ஜெர்னல் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர்.
அஸாஞ்சே மீது தேசத்துரோக குற்றத்தை சுமத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், விக்கிலீக்ஸின் எல்லா நடவடிக்கைகளும் அமெரிக்காவின் கருத்து சுதந்திரத்தின்படி அனுமதிக்கப்பட்டதே என அஸாஞ்ச் கூறுகிறார்.
அஸாஞ்ச் மீது வழக்கு தொடர வேண்டுமென்றால் ஆவணங்களை கசியவிட அஸாஞ்ச் பிராட்லி மானிங்கிற்கு நிர்பந்தம் அளித்தார் என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும். இதற்காக நடத்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியதாக வால்ஸ்ட்ரீட்
ஜெர்னல் தெரிவிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஸாஞ்சேவை சிக்கவைப்பதற்கான அமெரிக்காவின் திட்டம் தோல்வியை சந்திக்கிறது"
கருத்துரையிடுக