உலகிலேயே அதிகம் சர்க்கரை நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமான் ஆகியன முதலிடம் வகிப்பதாக எமிரேட்ஸ் டயபட்டீஸ் அசோசியேசன் சேர்மன் டாக்டர்.அப்துல்ரஸ்ஸாக் மதனி தெரிவித்தார்.
துபாயில் நடைபெற்ற டயபட்டீஸ் வல்லுநர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் அவர். அமீரகத்தில் தற்ப்பொழுது 10 லட்சம் பேருக்கு இந்நோய் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உடற்பயிற்சி இல்லாத வேலையும்,வாழ்க்கைமுறையும்தான் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது.சோர்வும்,தாகமும்தான் இந்நோய்க்கான அறிகுறிகள்.பல்வேறு நாடுகளைச்சார்ந்த 700 பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட இம்மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக உடல் நலத்துறை அமைச்சக செயல் இயக்குநர் டாக்டர்.ஸாலிம் அல் தர்மஹி துவக்கிவைத்தார்.
செய்தி :தேஜஸ்
செய்தி :தேஜஸ்
0 கருத்துகள்: on "வளைகுடா நாடுகளில் உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள்"
கருத்துரையிடுக