படித்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 பிப்., 2011

கோடிகளைப் புரட்ட விடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்

தேர்தல் வந்தால் போதும் நிதி வசூலை ஆரம்பித்துவிடுகின்ற கட்சிகள். அது எங்கிருந்துதான் இந்தக் கட்சிகளுக்கு பணம் கொட்டுகிறதோ... ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிவிடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களை விட அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த கட்சிகளின் வருமானங்கள், அது தொடர்பாக அக்கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள் போன்ற விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இவற்றைப் பெற்று வெளியிட்டுள்ளது அந்த
அமைப்பு.

2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள வருமானம் ரூ.717 கோடியே 69 லட்ச ரூபாய்!

பாஜக மட்டும் இளைத்ததா என்ன... ஆட்சியில் இல்லாவிட்டாலும் அக்கட்சி ரூ.343 கோடியே 8 லட்சம் ஈட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ.251 கோடியே 76 லட்சமும், ஏழைப் பங்காளர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி ரூ.122 கோடியே 53 லட்ச ரூபாயும், சமாஜ்வாடி கட்சி ரூ.71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் ரூ.57 கோடியே 40 லட்சமும், ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ.6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் பெற்றுள்ளது.

2007-08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008-09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பாஜகவுக்கு 6 கோடி ரூபாயும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

இவை வெளியில் தெரிந்த கணக்கு மட்டுமே. மறை முகமாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் இதைவிட இருமடங்கு இருக்கும் என்கிறது இந்த தகவல்களை வெளியிட்டுள்ள அமைப்பு.

இப்படியெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது எதற்காக? ஜனநாயகத்தை தழைக்கச் செய்யவா... ம்ஹூம்!

ஆட்சியிலிருக்கும் கட்சி மூலம் அதிக காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியாக உள்ள முக்கிய கட்சி அந்த காரியங்களைக் கெடுக்காமல் இருக்கவும்தான்!
தட்ஸ்தமிழ்
read more...

13 பிப்., 2011

இஃவான்கள் இலக்கை அடைவார்களா?

எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்கள் , 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது.

எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். இந்நிலையில் இஃவான்களைக் குறித்து மீள்பார்வை இதழில் வெளியான கட்டுரையை பாலைவனத் தூதில் வெளியிடுகிறோம்.

நபியவர்கள் கூறினார்கள்; "அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்"(அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்றபோது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டுவருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்றபோது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.

இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றையொன்று முழுமைப்படுத்துவதாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது இஸ்லாம் பற்றிய புரிதல் அதன் மூலமாக அல்குர் ஆன் சுன்னாவிற்கு மீளல். அதாவது எந்தக் கலப்புமின்றி குர் ஆன் சுன்னாவிலிருந்து தூயவடிவில் இஸ்லாத்தை விளங்கி அதனை நாம் வாழ்கின்ற காலத்தின் பாஷையில், வடிவத்தில், இயல்பில் நடைமுறைப்படுத்தல் எனப் பொருள்படும்.

அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது நபியவர்களது தாஃவா இந்த உலகில் எதை சாதிக்க நினைத்ததுவோ அல்லது சாதித்ததுவோ அதனை மீண்டும் இந்த உலகில் சாதித்துக்காட்டுவதுதான் புனர்நிர்மாணமாகும்.

நபியவர்களது தாஃவா, இஸ்லாத்திற்கான முதல் நிர்மாணம் அதனை புனர்நிர்மாணம் செய்வதென்பது அதே பணியை மீண்டும் மேற்க்கொண்டு அதே இலக்கை அடைதல் என்பதாகும். நபியவர்களது தாஃவாவின் இலக்கு என்ன? முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுதல், அவர்களுக்கு தலைமையை வழங்குதல், இந்த முழு உலகமும் இஸ்லாத்தின் வழிக்காட்டுதலில் இயங்கவேண்டும் என்பதே. இதுதான் நபியவர்களது பணி.

இதைத்தான் அல்குர் ஆன் இவ்வாறுக் குறிப்பிடுகிறது
"இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்;. பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன்."( அல்குர் ஆன்22:78)

நபியவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை. முஸ்லிம்கள் மனித சமூகத்தின் தலைமை. அதற்காகத்தான் அல்லாஹ் முஸ்லிம்களைத் தேர்வுச் செய்தான் என்கிறது இந்த அல்குர் ஆன் வசனம்.

உலகிற்கு வழிகாட்டி தலைமையை வழங்கும் இந்தப் பணிக்காகத்தான் கிலாபத் அவசியப்பட்டது. தலைமையை வழங்கும் அதிகார மிக்க இடம்தான் கிலாபத். நபியவர்களின் முதல் நிர்மாணம் இந்த இலக்கை அடைந்தது. பின்னர் நீண்ட காலம் உலகிற்கு வழிக்காட்டித் தலைமையை வழங்கியது. ஆனால் 1924ம் ஆண்டுடன் அது சரிந்து வீழ்ந்தது.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது.

1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா?என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.

இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."( அல்குர் ஆன்2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக,தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நன்றி:மீள்ப்பார்வை ஏப்ரல் 2007.
read more...

6 பிப்., 2011

கஷ்மீர் குறித்த ஆவணப் படத்திற்கு இந்திய சென்சாரில் போராட்டம்

பிப்.6:அஷ்வின் குமார் இயக்கிய கால்பந்து விளையாட்டு பற்றிய இந்திய ஆவணப் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் போராட்டம் நடந்து வருகிறது.

கஷ்மீரில் பிறந்த பாஷ்ராத் என்கிற திறமையான கால்பந்து வீரர், பிரேசிலில் கால்பந்து பயிற்சி எடுக்க முயற்சி செய்யும் போது தான் கஷ்மீரி என்பதால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லும் படம்.

இந்த இயக்குனர் இதற்கு முன் இயக்கிய 'லிட்டில் டெரரிஸ்ட்' என்கிற குறும்படம் 2004 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் ரோடு டு லடாக்(2003), தெ பாரெஸ்ட்(2008), டேஸ்டு இன் டூன் (2010) போன்ற படங்களை இயக்கியவர். ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்பட்ட இவரது 'லிட்டில் டெரரிஸ்ட்' உலகெங்கும் நூற்றி மூன்று திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்போது இவர் இயக்கி இருக்கும் 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' (Inshaallah football) என்று பெயரிடப்படுள்ள இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற புசான் சர்வதேசிய திரைப்பட விழா' (Pusan International Film Festival) மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற 'துபாய் சர்வதேச திரைப்பட விழா' (Dubai International Film Festival) ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது.

ஆனால் இந்தியாவில் வெளியிட இந்திய சென்சார் போர்டை அனுகியபோது முதலில் இந்த படத்தை தடை செய்ததாகவும் அதன் பின் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தின் இயக்குனர் அஷ்வின் குமார் டிசம்பர் 23, 2010 அன்று தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த படத்தை இந்திய சென்சார் போர்டு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இருந்தும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை மறுத்து ஷர்மிளா தாகூர் மறுநாள் 'தி ஹிந்து' நாளிதழில் பேட்டி அளித்து இருந்தார். இரு முறை நிராகரிக்கப்பட்டு பிறகு இந்த படத்திற்கு இறுதியில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படமான 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' படத்தில் சித்தரவதை செய்வதை விவரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்று 'அவுட்லுக்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பத்தை மறுத்து இந்திய சென்சார் போர்டிற்கு பெரிய நெடிய கடிதம் ஒன்றை இயக்குனர் அஷ்வின் எழுதி 'ஃபேஸ்புக்' மூலம் வெளியிட்டு இருந்தார். அதில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள், தொலைக்காட்சி சானல்கள், டி.டி.ஹெட்ச் போன்றவற்றால் நிராகரிக்கப்படுவதை குறிப்பிட்டு மறுபரிசீலனை செய்து 'U/A' சான்றிதழ் வழங்க முயற்சித்து இருந்தார்.

டெஹல்கா இதழ் பேட்டியின் போது இதை ஷர்மிளா தாகூரிடம் கேட்ட போது அந்த காட்சி நீக்கப்பட்டால் அந்த படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதற்கு அஷ்வின் குமார் "இது கற்பனை கதை அல்ல, கஷ்மீரிகளின் வாழ்கையில் தினமும் நடக்கும் உண்மை கதையை உலகம் அறிவதற்காகவே எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source:ஊடகம்
read more...

26 ஜன., 2011

காவிக் கொடியவர்களின் கையில் சிக்கிய தேசியக்கொடி

இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை, படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் கஷ்மீரிகளின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு பாசிச பா.ஜ.க சங்பரிவார தொண்டர்களை திரட்டிக்கொண்டு ஸ்ரீநகர் சென்று குடியரசு தினத்தன்று (இன்று,26,ஜனவரி.2011) தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து கஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.

தேசப்பற்று, தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க ஆரம்பித்துள்ளது.

கொடி பிடிக்க காரணமென்ன ?
அஜ்மீர், மாலேகான் மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின் உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின் முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.

பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே இல்லை.

ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு.

இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக் கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது.

சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக 'மூவர்ண கொடியை' தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும் வருந்தியும் காவிக் கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு கட்டுரை வடித்தது.

ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக் கொடியை' பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது அதனால் மூன்று வர்ணங்களை கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி காவிக் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்' என்ற நூலில்கூட தேசியக் கொடியை விமர்சித்து காவிக் கொடியை புகழ்ந்து, இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலைவணங்க வேண்டிய நிலை உருவாகும் என்று எழுதியிருந்தது.

சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக் கொடிக்கு இன்று வரை இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா' பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக் கொடியை பறக்கவிட்டதே இல்லை. ஆனால் எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி தென்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர்.

ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வந்திருக்கிறது.

பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் சட்டத்தை சந்திக்க திராணியில்லாது தாங்கள் செய்த 'காலித் தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.
பிறைநதிபுரத்தான்
read more...

29 நவ., 2010

யார் அந்த ராடியா?

நிரா ராடியா!
மோடி-ராடியா உறவு வெட்ட வெளிச்சம்

மூச்சுக்கு முந்நூறு தடவை இன்று ஊடகங்களால் உச்சரிக்கப்படும் பெயர்.

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் ஆளுமைகள் பலரும் இவருக்கு அணுக்கமான நண்பர்கள். அதிகார வட்டத்தில் இவருக்கு ஆள்பலம் அதிகம். நிராவின் பேச்சை அட்சரம் பிசகாமல் கேட்டு நடந்தால் பதவிகள் உங்களைத் தேடிவரும்.

இவையெல்லாம் நிராவைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் செய்திகள். கார்ப்பரேட் கண்சல்டன்ட் என்று கண்ணியமாக அழைக்கப்பட்டாலும் உண்மையில் அவர் இந்தியாவின் சக்திவாய்ந்த அதிகாரத் தரகர் என்ற கருத்தும் இருக்கிறது.

இவற்றில் எது உண்மை? அதைவிட முக்கியமாக, யார் இந்த நிரா ராடியா?
நிரா ராடியாவில் இருக்கும் 'ராடியா’ என்பது இவருடைய கணவரின் பெயரின் ஒரு பாதி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். லண்டனைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஜனக் ராடியாவுக்கும் நிராவுக்கும் இடையே என்பதுகளின் இறுதியில் திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் பிறந்ததும் கணவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு. விவாகரத்து வாங்கிய கையோடு மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார் நிரா ராடியா.

அளவான படிப்பு. அளவுக்கு மீறிய துணிச்சல். தேனொழுகும் பேச்சு. திகட்டத் திகட்டத் திறமை. போதாது? சஹாரா இந்தியா ஏர்லைன்ஸில் உத்தியோகம் கிடைத்தது. அவசரத்துக்கு வேலையில் சேர்ந்துவிட்டாலும் நிராவுக்குப் புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, மக்கள் தொடர்பு மற்றும் கன்சல்டன்சி துறையில்.

வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பதுதான் நிரா தொடங்கிய நிறுவனத்தின் பெயர். கார்ப்பரேட் நிறுவனங்களின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக விவகாரங்களைக் கவனித்துக்கொள்வதுதான் இவருடைய பணி. தொழிலில் காட்டிய நேர்த்தியும் பக்குவமும் பல பெரிய நிறுவனங்களை நிராவின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இடம்பெறச் செய்தன.

வர்த்தக உலகில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் டாடா மற்றும் ரிலையன்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு விவகாரங்களைப் பார்த்துக்கொள்வது நிராவின் வைஷ்ணவி நிறுவனம்தான். இவர்கள் தவிர, யுனிடெக், ஸ்டார் குரூப் தொலைக்காட்சிகள், பார்தி க்ரூப், வேதாந்தா, ஹெச்.சி.எல் இன்ஃபோ சிஸ்டம்ஸ் என்று இந்தியாவின் கார்ப்பரேட் பெருந்தலைகள் பலருடைய ஊடக விவகாரங்களை நிர்வகிப்பது ராடியாவின் நிறுவனங்கள்தான்.

ஒற்றை நிறுவனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு உறவு வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் ஒத்தாசைக்கு மேலும் சில நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டார் நிரா ராடியா. நியோகாம் கன்சல்டிங் என்பது நிரா ராடியாவின் இன்னொரு நிறுவனம். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக விவகாரங்களைத் தற்போது கவனித்துக்கொள்வது இந்த நிறுவனம்தான். இவை தவிர, நொய்சிஸ், விட்காம் போன்ற நிறுவனங்களும் அம்மணிக்குச் சொந்தமானவைதான்.

தொழிலதிபர்களுடன் கொண்ட தொடர்புகள் அவருக்கு அரசியல்வாதிகளை அறிமுகம் செய்துவைத்தன. நீங்கள் பழகும் ஒவ்வொரு நபரிடமும் உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களை உருவாக்கி அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடவேண்டும் என்பது மக்கள் தொடர்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தினருக்கான பாலபாடம். அதில் நிரா ராடியா படு சமர்த்தர். அவருடைய புகழ் பரவத் தொடங்கியது.

அரசாங்க காண்ட்ராக்ட் வேண்டுமா, நிராவைப் பாருங்கள். கேட்டது கிடைக்கும். டெண்டர் கிடைக்கவேண்டும் என்றால் நிராவை நாடுங்கள். நிராவும் அவருடைய பணியாளர்களும் சிந்தாமல் சிதறாமல் செய்துமுடித்தார்கள். பேரம் பேசுவது, பேச்சு வார்த்தை நடத்துவது, பணப் பரிவர்த்தனைகளைப் பக்காவாக முடித்துக் கொடுத்தனர். முக்கியமாக, நானோ கார் திட்டத்தின் மக்கள் தொடர்பு விவகாரங்களைக் கவனித்துக்கொண்டது நிராவின் நிறுவனம்தான். அரசு நிர்வாகத்துக்கும் தொழிலதிபர்களுக்கும் சக்தி வாய்ந்த மீடியேட்டராக உருவெடுத்தார் நிரா.

இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளின் மொபைல் எண்கள் இவருடைய மொபைலில் இருக்கும் அல்லது இவருடைய எண்கள் அவர்களுடைய மொபைலில். வர்த்தக விஷயங்களைக் கையாண்ட நிரா மெல்ல மெல்ல அரசியல் அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பவர் புரோக்கராகவும் அவதாரம் எடுத்தார்.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள். மத்திய, மாநில அமைச்சரவையில் இடம்பெற விரும்புபவர்கள் தங்கள் கட்சித் தலைமையுடன் பேரம் பேச, லாபி நடத்த நிராவை நாடினர். அவரும் தனது வேலைகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கவே மேன்மேலும் பிரபலமடையத் தொடங்கினார். ஜார்கண்ட் முதலமைச்சராக சில மாதங்கள் இருந்த மது கோடா மீது மிகப்பெரிய ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கிறது அல்லவா, அது நிலுவையிலேயே இருப்பதில் நிராவின் பங்களிப்பு மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது.

அரசின் முக்கியப் பதவிகளில் இடம்பெற விரும்புபவர்கள் பலரும் நிராவைத் தொடர்புகொண்டு காரியம் சாதித்துக்கொண்டனர். பணம் பாதாளம் வரை பாய்ந்தது. இத்தனை காரியங்களைச் செய்துமுடித்தபோதும் நிராவின் முகம் மட்டும் யாருக்கும் தெரியாது. குறிப்பாக, இவரைக் கொண்டு காரியம் சாதித்த பலரும் நிராவுடன் தொலைபேசியில் பேசியிருப்பார்கள். அல்லது நிராவின் பிரதிநிதியுடன் நேரில் பேசியிருப்பார்கள்.

நிராவின் பெயர் அரசியல் வட்டத்தில் பிரபலமடையத் தொடங்கியபோதே பிரச்னைகளும் ஆரம்பித்துவிட்டன. நிராவால் பலன் கிடைக்காத அல்லது பதவி தடுக்கப்பட்ட நபர்கள் போட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கினர். அதன் விளைவாக, 2009 மே மாதத்தில் நிரா ராடியாவின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. உபயம்:இந்திய வருவாய் கண்காணிப்பு இயக்ககம்.

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் நிரா ராடியா நடத்திய உரையாடல்கள் அப்போது பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவை எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சிகளும் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளும் அந்த உரையாடல்களில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டன.

2009ல் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற சமயத்தில் அந்த அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறவேண்டும் என்பதில் நிரா ராடியாவின் பங்களிப்பை அந்த உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன;

முக்கியமாக, பத்திரிகையாளர்கள் வீர் சங்வி, பர்கா தத், தொழிலதிபர் ரத்தன் டாடா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பிரபல பத்திரிகையாளர் ஷங்கர் அய்யர் போன்றோர், ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகவேண்டும் என்பதற்காகவும் தயாநிதி மாறனுக்கு அந்தத்துறை கிடைக்கக்கூடாது என்பதற்காகவும் லாபி செய்துள்ளதை அந்த உரையாடல்கள் உறுதிசெய்கின்றன.

புதிய தொழில்முனைவராக அறிமுகமான நிரா ராடியா மெல்ல மெல்ல கட்சி எல்லைகள் அனைத்தையும் கலைத்துப்போட்டுவிட்டு, அதிகார வர்க்கத்தின் அசைக்க முடியாத நண்பராக வலம் வந்தார். தற்போது அதே அதிகார வர்க்கத்தால் நெருக்கடிக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார். இந்தச் சிக்கலில் இருந்து தப்பித்தால் அது நிராவுக்கு இன்னொரு வகையில் லாபம்தான். ஆம். கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் துறையில் புதிய நிறுவனத்தைத் தொடங்கமுடியும் அல்லவா!

நன்றி:தமிழ் பேப்பர்
read more...

1 அக்., 2010

வீணாகிப்போன விசாரணைகள், கிடப்பில் போடப்பட்ட ஆதாரங்கள் – அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு !

"பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை" என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

"இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்." இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

"சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்." இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார்? தோற்றவர் யார்? என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

"இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது." என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமர்சனம். "இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்" என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், "சுக்குமி-ளகுதி-ப்பிலி" என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, "இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை" என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். "அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை" என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். "நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது" என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் ன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

"கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை." என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. "எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி" என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத் தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, "சர்ச்சைக்குரிய இடம்" என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம். போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:
அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்?

மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

நன்றி:வினவு.காம்
read more...

19 ஆக., 2010

பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம் ஓரினப் பறவைகள்

ஆக19:பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக 'பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள்.

மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸூம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும் போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்?

தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ 500 கோடியாக இருந்ததை ரூ 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும். முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு ரூ 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது.

இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி,மின் உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா?

அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்?

அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!

மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?
read more...

11 ஆக., 2010

அருந்ததி ராயின் தண்டகாரண்யா காடு

அருந்ததிராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க,அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.

'ஆபரேஷன் பசுமை வேட்டை' என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார்.

கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்.

"தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?"

"மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியா என்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறது என்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது 'நல்ல விலை'யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.

அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம் அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர்களை 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி' என வர்ணிக்கிறார் பிரதமர்.

தண்டகாரண்யா காட்டில் நடப்பதை வெறு மனே ‘கிளர்ச்சியாளர்களை அடக்கும் நடவடிக்கையாக’ மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அங்கு நடப்பது ஒரு போர். உள்நாட்டுப்போர். சொந்த மக்களை வதைத்து, பட்டினியில் வாடும் ஏழைப் பழங்குடி மக்களைக் கொன்று, மலையின் வளங்களைப் பெரு முதலாளிகளின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!"

"அதற்காக மாவோயிஸ்ட்டுகள் ரயில்களைக் கவிழ்ப்பதையும், அப்பாவிகளைக் கொல்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"

"நான் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை, அதை யார் செய்தபோதிலும் ஒருபோதும் ஆதரிக்கப் போவது இல்லை. ஆனால், ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதற்கு முன்பே 'இதை மாவோயிஸ்ட்டுகள்தான் செய்தார்கள் எனத் தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும்போதும், காடுகளைவிட்டுத் துரத்தப்படும் போதும் எங்கு போயிருந்தனர்? போராடும் மக்களின் சாதிப் பிரிவினையை அதிகப்படுத்தி ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரில் அரசக் கூலிப் படைகளை உருவாக்கி, சொந்த மக்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிக்கிறது அரசு. இந்த சல்வா ஜூடும் என்கிற கூலிப் படை, இதுவரை சுமார் 700 கிராமங்களைத் தீயிட்டு அழித்திருக்கிறது. மூன்று லட்சம் மக்களைக் காடுகளுக்குள் துரத்தி இருக்கிறது. எதற்காக? அந்த மக்களை அங்கே இருந்து துரத்தி, நிலத்தை அபகரித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக. இந்த அரசக் கூலிப் படையை உருவாக்கியவர் அந்தப் பகுதியின் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திர கர்மா என்பவர்.

சல்வா ஜூடுமுக்குச் சம்பளம் தருவது டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள். இப்படி சொந்த அரசாங்கத்தால் எல்லா வகையிலும் கைவிடப்பட்ட மக்கள், வேறு வழியின்றிதான் மாவோயிஸ்ட்டுப் படையுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர்கள் காடுகளுக்குள் போராடுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. நிஜத்தில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணா மல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குப் புரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாகச் செய்தால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என அவர்கள் நம்புகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது?"

"'பசுமை வேட்டை' நடவடிக்கையில் நீங்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே… ஏன்?"

"ஏனெனில், அவர்தான் இந்தப் போரின் சி.இ.ஓ. இப்போது தண்டகாரண்யா காட்டின் பாக்ஸைட் கனிமத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் அவர். அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முந்தைய நாள்தான் வேதாந்தா பதவியை ராஜினாமா செய்தார். இப்போது தன் முன்னாள் எஜமானருக்கு விசுவாசமாக, சொந்த நாட்டின் மக்களைக் கொன்றொழிக்கிறார். இந்தப் போருக்கு மக்களிடம் தார்மீக மனநிலை ஆதரவைப் பெறுவதற்கு, ‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால், எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாட்டைக் கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் நடந்துகொண்டு இருக்கும் எண்ணற்ற பிரச்னைகள் எல்லாம் மாவோயிஸ்ட்டு பிரச்னைகளாக மாற்றப்படுகின்றன.

முன்பு, 'முஸ்லிம் பயங்கரவாதம்' என்ற சொல்லை வைத்து பெரும் பிரசாரம் செய்து கொண்டு இருந்த ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் இப்போது 'சிவப்புப் பயங்கரவாதம்' பற்றி வாய் ஓயாமல் பேசுவதைக் கவனிக்க வேண்டும்.

உலகின் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் அந்தப் பழங்குடி மக்களின் வளங்களைச் சுரண்டுவதற்கு நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு இருக்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு நதியின் மீதும், ஒவ்வொரு காட்டின் மீதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதை மறைப்பதற்குத்தான் உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு அபாயம் என்ற பூதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்!

‘எங்கோ தண்டகாரண்யா காட்டில் நடக்கிற யுத்தம்தானே, நமக்கென்ன?’ என நீங்கள் நினைத் தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தப் போர் நாளை மறுநாளோடு முடியப் போவது இல்லை. இது வருடக்கணக்கில் தொடரப் போகும் யுத்தம். இந்தப் போர் விழுங்கப் போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கும். அது உங்களையும் மோசமாகத் தாக்கும்!"

"இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?"

"உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அரசாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது. இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது".

தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப்பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளை வைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்!"

"ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்படுவதுபற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பதையும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால், போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?"

"எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ-ல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்?

உண்மையில், இலங்கையின் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்கு ஆக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர்.

இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், நம் நாட்டில் காங்கிரஸ், பாஜக., திமுக., அதிமுக. போன்றவை புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை, டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன!"

"மாவோயிஸ்ட்டு வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் சேர்ந்த சீதாராம் யெச்சூரி சொல்கிறார். கம்யூனிஸ்ட்டுகளின் இந்தக் கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"(சிரிக்கிறார்) அவர்கள் டாடாவிடமும், அம்பானி யிடமும் சரணடைந்த பிறகு, பாட்டாளிகளுக்கான கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் பழங்குடி மக்கள் மீது விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதும். உடனே, 'மாவோயிஸ்ட்டுகள் வேறு, பழங்குடிகள் வேறு' என்று யாரேனும் இலக்கணம் சொல்வார்களானால், அவர்களுக்கு நான் சொல்கிறேன், 99 சதவிகிதப் பழங்குடிகள், மாவோயிஸ்ட்டுகள் அல்ல; ஆனால், 99 சதவிகித மாவோயிஸ்ட்டுகள்... பழங்குடிகளே!"

"ஆமாம், நான் ஒரு மாவோயிஸ்ட்டுதான்' என நீங்கள் பேசியதாகச் செய்தி வந்ததே?"

"நான் சொல்லாத ஒன்றை ஏன் திரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நான் எதிர்ப்பியக்கம் பக்கம்தான் நிற்கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறேன். இது வெளிப்படையான ஒன்று. ஆனால், ஏன் நான் சொல்வதை மாற்றுகிறார்கள்? இதன் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. இந்த அரசை எதிர்த்தால் முத்திரை குத்தப்படுவீர்கள் என்ற மிரட்டல் இருக்கிறது.

நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங்களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது. இந்த அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று சொல்வதே சட்ட விரோதமாக இருக்கிறது.

நீங்கள் காட்டுக்குள் இருந்தால், உங்கள் நெஞ்சில் ஒரு தோட்டா பாயலாம். நாட்டுக்குள் இருந்தால், சிறையில் அடைக்கப்படலாம். இதற்குத் தயாராக இருந்தால்,நீங்கள் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தயாராகலாம்!"
பேட்டி-பாரதிதம்பி
மூலம்:ஆனந்த விகடன்
read more...

5 ஆக., 2010

கஷ்மீர்:ஓயாத கல்வீச்சு! தேயாத ரிக்கார்டு!!

ஆக,5:விலைவாசி உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த அமளி சுமுகமாக முடிவுக்கு வர இருக்கிறது.கஷ்மீர்தான் அடங்க மறுக்கிறது. கடந்த சில நாட்களாக தினசரிகளின் முதல்பக்க செய்தி கஷ்மீர் பற்றித்தான். கஷ்மீர் மக்கள் வீசுகின்ற கற்கள் இமயத்துக்கு இணையான ஒரு மலையாக குவிந்து கொண்டிருக்கின்றன. இத்தனை நாள் அழுது அரற்றும் கஷ்மீர் பெண்களின் படங்களைத்தான் தினசரிகளில் பார்த்திருக்கிறோம். இப்போது பெண்கள் கல்லெறிகிறார்கள். முழக்கமிடுகிறார்கள். கையில் தடிக்கம்பு எடுக்கிறார்கள்.

இதை எப்படி விளக்குவது? தினமணி எப்படி விளக்குகிறது பாருங்கள்.

"பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, காஷ்மீர் மாநிலத்தில் கலவரத்தை தூடண்டி வருகிறது. ஐ.எஸ்.ஐ யின் கைப்பாவையாக செயல்படும் பிரிவினைவாதிகள் பல இடங்களில் போராட்டத்தை தூண்டி வருகின்றனர். போராட்டக்களத்தில் குழந்தைகளையும் பெண்களையும் முன்நிறுத்தி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.அப்பாவி மக்களுக்கு இடையே மறைந்திருந்து படை வீர்ரஃகளை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர். இதனால் படைவீரர்களும் திருப்பி சுட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுமக்களே கிளர்ச்சி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதே அவரகள் திட்டம்" இது இன்றைய தினமணியின் முதல்பக்க செய்தி.

"நடைமுறையில் அரசின் அதிகாரம் என்பதே வீழ்ந்துவிட்டது. கஷ்மீர் போலீசார் ரோட்டில் விட்டு அடிக்கப்படுகின்றனர். அவர்களது ஆயுதங்கள் பிடுங்கப்படுகின்றன. வீடுகள் எரிக்கப்படுகின்றன. அனைத்திலும் துயரமானது என்னவென்றால், ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் இளைஞர்களைச் சுட்டுக் கொல்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளாலும் போராட்டத்தில் முன்நிற்கும் இளைஞர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. கஷ்மீரின் இஸ்லாமியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி முதல் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் முகமது யூசுப் ஷா வரை யாருடைய வேண்டுகோளாலும் இந்த வன்முறைப் போராட்டப் பேரலையைத் தடுத்துநிறுத்த முடியவில்லை"
இது இந்து பத்திரிகையின் தலையங்கம்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத்தேவையில்லை.

மூன்றாவதாக இந்து பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதியின் நடுப்பக்க கட்டுரை என்ன சொல்கிறது? "டாக்டர்களும் எம்.பி.ஏ பட்டதாரிகளும் கூட வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். கஷ்மீரிகளும் இந்தியர்களே என்று சொல்லிக் கொண்டே, மொபைல் போன், இணையத் தொடர்பு போன்றவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதால்தான், தங்களை இந்தியர்களாக அவர்களால் உணர முடிவதில்லை" என்கிறார் மாலினி.

"பாகிஸ்தான் தூண்டுதல்தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்."
"இல்லையில்லை. வளர்ச்சித் திட்டம் போய்ச் சேராததுதான் இளைஞர்கள் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுக்க காரணம்"

இதை அடிக்கடி எங்கேயோ கேட்டமாதிரி இல்லை?"மாவோயிஸ்டு தூண்டுதல்தான் பழங்குடி மக்கள் ஆயுதமேந்தக் காரணம்", "இல்லையில்லை. பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சியைப் புறக்கணித்த்துதான் அவர்கள் மாவோயிஸ்டுகளிடம் போய்ச்சேரக் காரணம்" என்ற அதே லாவணிக் கச்சேரி. அதே ராகம். வெவ்வேறு பாடல்கள்!

ஏம்பா இந்த ரிக்கார்டு தேயவே தேயாதா?
வினவு
read more...

போபாலுக்கு பட்டை நாமம்! அமெரிக்காவுக்கு பாலபிஷேகம்!!

மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டீஷ் பெட்ரோலியம் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு கசிந்து அந்த வட்டாரமே எண்ணெயில் மிதக்கிறது. இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடு மீள்வதற்கே பல ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது. இதன் பொருட்டு அந்த நிறுவனம் அமெரிக்க அரசுக்கு 20 பில்லியன் டாலர் நட்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறதாம். இருக்கட்டும்.

போபாலில் அரசு கணக்குப்படி 3500 பேர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்திற்கு யூனியன் கார்பைடு நிறுவனம் கொடுக்க முன்வந்த நட்ட ஈடு வெறும் 470 மில்லியன் டாலர் மட்டுமே. எண்ணெய் கசிவுக்கு மட்டும் இதைப் போல இருபது மடங்கு அதிகம் தொகையை அமெரிக்கா வாங்கியிருக்கிறது.

அமெரிக்க கருணையின் இரட்டைவேடத்திற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா என்ன?
வினவு
read more...

26 ஜூலை, 2010

ஹிந்துத்துவ தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்

சி.பி.ஐ. மற்றும் காவல்துறையால் 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் சம்பவங்கள் அனைத்தும் ஹிந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை.19'2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

'2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி. இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, இந்திய முஜாஹிதீன்,ஹர்கத்-உல்-ஜிஹாத், பாகிஸ்தான் ஆதரவு, சிமி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்து வந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.

முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிஹாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை.

தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை,சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன.

பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள்.ஆனால் இப்போது "ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது" என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.

2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami-HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது.

ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட,உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ. இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில்,கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர்.சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துஸ் ஸமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்டிரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துஸ் ஸமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை,அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன.

2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மஹாராஷ்டிராவில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது.கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான்.

ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்க வேண்டும்.

ஹைதராபாத் மெக்கா மசூதி,அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவ திரவாத அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன.

2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கரா, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன.அதே ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது.அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும்,முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவைகளைக் கொண்டே ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம்.இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

"கடந்த 10 ஆண்டுகளாகவே ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய சம்பவங்களெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன" என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி,மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ. இப்போதுதான் ஆலோசித்து வருகிறது.

2008 செப்டம்பர் 29ல் மலேகானில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில் பெண் தீவிரவாதி சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு.

தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான்.

ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர்.

அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளவும்.

4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

"இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்.” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட தீவிரவாதிகளான புரோகித்தும், சாத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர்.

அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, "தனி இந்து ராஷ்ட்ரம்" அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு "கர்கரே சந்திப்பு" என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.

முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை.ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது.

2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சாத்வி,அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS.

68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன.முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்கரா, சுவாமி அசீமானந்தா உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம்.

மஹாராஷ்டிரா,இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி பெண் தீவிரவாதி சாத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் "கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது.

அஜ்மீர்,மெக்கா மசூதி,மலேகான்,சம்ஜவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, ஹிந்துவ தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.

(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.) , outlookindia
தமிழாக்கம்:பிரபாகரன்,கீற்று
read more...

23 ஜூலை, 2010

கேரளாவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? பாப்புலர் ஃப்ரண்ட் விளக்கம்

கேரளாவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் விளக்கமளித்துள்ளது.வாசகர்கள் விளக்கத்தைப் படிக்க அதன் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.






read more...

15 ஜூலை, 2010

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.
source:satyamargam
read more...

14 ஜூலை, 2010

கஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

"அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!" - என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. கஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் விசமத்தனம். அமர்நாத்தில் உள்ள செட்டப் செய்யப்பட்ட பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களை தாக்குவதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்துவிட்டு தாக்குதலுக்கான உத்திரவை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தினமணி கூறுகிறது. இதற்கு ஆதாரமென்ன? எதுவுமில்லை.

அடுத்து தினமணி கூறுவதை அப்படியே தருகிறோம்.
"பாலஸ்தீனத்துப் போராளிகள் இன்டிஃபாதா என்ற முறையில் கற்களை வீசி தாக்கியதைப்போல காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.”

“போலீசாரை அடித்து காயப்படுத்தும் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ரொக்கப்பணம் தந்து ஊக்குவிக்கின்றனர். உள்ளூரில் இருக்கும் அவர்களுடைய ஏஜெண்டுகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் பெருந்தொகைகளை அவர்களுக்குத் தருகின்றனர். இதனால் பல இளைஞர்கள் மேற்படிப்பு, வேலை என்று எதிலும் அக்கறை காட்டாமல் காஷ்மீரின் முழு விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.”

“இந்தத் தாக்குதல் எல்லை மீறி அதிகரித்துக் கொண்டே வருவதால் இப்போது ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் தன் பொறுப்பில் காஷ்மீரப் பள்ளத்தாக்கை எடுத்துக்கொண்டுவிட்டால் பிறகு ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி தரப்படும் என்பதால் அவர்களுடைய கவனத்தைச் சிதறவைக்கவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் ஹிந்துக்களான அமர்நாத் யாத்ரிகர்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவிக்குமாறு பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டி வருகின்றனர்.”
– தினமணி, 12.07.2010

கடந்த மாதம் முழுவதும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் துணை இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்து மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். ஆனால் அந்தப் போராட்டம் பாக்., ஆதரவு பயங்கரவாதிகளால் தூண்டி விடப்படுகிறதாம்.

கல்லெறிவதற்கு கூட பணம் கொடுக்கப்படுகிறது என்று தினமணி கூசாமல் பொய் சொல்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் பணத்துக்காக செத்திருக்கிறார்கள் என்றால் தினமணி எவ்வளவு நயவஞ்சகமாக பேசுகிறது பாருங்கள்!

கஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ”இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. அது இந்திய இராணவம் மற்றும் துணை இராணுவத்தை எதிர்த்து மக்கள் வீரஞ்செறிந்த முறையில் போராடுவதின் அடையாளம். அதை உண்மைதானா என்று பார்த்தறிய விரும்பினால் தினமணி ஆசிரியர் நேரில் சென்று விசாரிக்க வேண்டும்.

இறுதியாக அமர்நாத் பக்தர்கள் இதுவரை 2.90 இலட்சம் பேர் பதிவு செய்து அதில் 1.35 பக்தர்கள் பயணத்தை முடித்திருப்பதாக தினமணி கூறுகிறது. எனினும் இதுவரை இவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நிகழவில்லை. அதற்கு பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தினமணி கூறுகிறது. அதையும் வதந்தி போல அல்லாமல் நேரிடையாக பயங்கரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்டது போல எழுதுகிறது.

மேசையில் இருந்து கொண்டு கஷ்மீரைப் பற்றிய இத்தகைய செய்திகளை தினமணி மட்டுமல்ல,ஏனைய தேசிய பத்திரிகைகளும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. ஆனால் இவர்களின் அவதூறைப் புறந்தள்ளி காஷ்மீர் மக்களின் போராட்டம் அன்றாடம் வளர்ந்து வருவது கண்கூடு.
vinavu
read more...

12 ஜூலை, 2010

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்

நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே. 'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான்.காவல்நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர்.இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும்,கிறிஸ்தவமாக இருந்தாலும்,இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது.தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது;இப்போதும் அது தொடர்கிறது.அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.
'கீற்று' இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, இந்திய முஸ்லிம்களின் சமூக, அரசியல் வாழ்நிலை குறித்தான ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் தங்களது வேதனைகளை, வலிகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். அச்சுமூட்டுவதாகவும், பதற்றம் தருவதாகவும் இருக்கும் தினவாழ்வில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முற்போக்கு சக்திகளின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கீற்றின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த நிகழ்வை கீற்று இணையதளம் ஒருங்கிணைக்கிறது.

அமர்வு - 1
இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)

கருத்துரை:வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்)
'தலித் முரசு' புனித பாண்டியன்

அமர்வு - 2
"குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது." - பெரியார், குடிஅரசு - தலையங்கம் - 01.05.1927
கீற்று.காம் - பயணமும், இலக்கும்

கருத்துரை:சுப.வீரபாண்டியன்
விடுதலை இராசேந்திரன்
ஜெயபாஸ்கரன்
பாரதி கிருஷ்ணகுமார்
மாலதி மைத்ரி
பாஸ்கர் சக்தி
யுகபாரதி
அனைவரும் வருக
- கீற்று ஆசிரியர் குழு
தொடர்புக்கு: 99400 97994

source:keetru.com

read more...

8 ஜூலை, 2010

கஷ்மீரில் அடக்குமுறைக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம்

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் மக்கள் போராட்டம் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் பதினைந்து மக்கள் போலீசின் துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த அடக்குமுறை காஷ்மீருக்கு புதிதல்ல.

ஏப்ரல் 30ஆம் தேதி எல்லைக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள மச்சீல் செக்டர் எனும் பகுதியில் ஒரு வீட்டை சுற்றி வளைத்த இந்திய ராணுவம் அப்பாவி மக்கள் மூவரை சுட்டுக் கொன்றது. ஆரம்பத்தில் இவர்கள் மூவரும் பாக் தீவிரவாதிகள் என்ற கட்டுக்கதை பரப்பப்பட்டது. பின்னர்தான் இவர்கள் ரபியாபாத் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட அப்பாவிகள் என்பதும், பதவி உயர்வுக்காக ராஜ்புத் ரைஃபிள்ஸ் 4 படையின் ராணுவ மேஜர் உத்தரவின் பேரில் அவர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.

மக்கள் போராட்டத்தால் இந்த கொலை பின்னர் அரசாலேயே ஏற்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள்,ஆள்காட்டிகள் எல்லாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான மேஜர் உபேந்தர் தலைமறைவாகிவிட்டார்.

இதன் பின்னர் ஜூன் 11ஆம் தேதி பாராமுலா, ஸ்ரீநகரில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவன் துஃபைல் கொல்லப்பட்டார்.
ஜூன் 25ஆம் தேதி சுபோரில் மீண்டும் ராணுவம் நடத்திய போலி என்கவுண்டரில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இர்ஷத் அகமத் என்ற ஒன்பது வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

இதைக் கண்டித்து ஹூரியத் மாநாடு உட்பட பல அமைப்புகள் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. இதிலும் துப்பாக்கி சூடு நடந்தது. மீர்வாஜ் உமர் ஃபாரூக் உட்பட பல ஹூரியத் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் போன்றோரை காஷ்மீர் அரசு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டததில் கைது செய்து இருக்கிறது. ஆனாலும் மக்கள் போராட்டம் நிற்கவில்லை.

போராட்டம் வீச்சாக நடைபெறுவதைக் கண்டு அஞ்சிய அரசு கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவை பல பகுதிகளில் அறிவித்து அடக்கி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு உத்திரவை மீறி மக்கள் தெருக்களில் இறங்கி துணிச்சலுடன் போராடிவருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் போலீசின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு 70பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இப்போது போலீசுக்கு துணையாக இராணுவத்தை இறக்கவும் அரசு முனைந்திருக்கிறது. காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும், மத்திய உள்துறை அமைச்சரும் இந்த போராட்டங்கள் பாக் ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் தூண்டிவிடப்படுவதாக கூசாமல் புளுகி வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயிரை மயிர் போல அலட்சியப்படுத்துவதற்காக இப்படி திசை திருப்ப முயல்கின்றனர்.

ஐந்து இலட்சம் இராணுவத்தினர், பல்லாயிரம் மத்திய துணை இராணுவ போலீசார்.. என காஷ்மீர் முழுவதும் இந்திய அரசின் பயங்கரவாத இராணுவம்தான் கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இதை அறுவடை செய்ய நினைக்கும் பாக் அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த பகடையாட்டத்தை புறந்தள்ளி காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு பத்தாண்டுகளாக காஷ்மீரின் இளைய சமுதாயம் இந்த போராட்டத்தினூடாகவே வளர்ந்து வருகிறது. “இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற முழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது.

துப்பாக்கிச்சூட்டில் பலியான உடல்களைக் கண்டு மக்கள் அஞ்சவில்லை. உடல்களை ஆயுதமாக்கி அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகின்றனர். ஆப்பசைத்த குரங்காய் இந்திய இராணுவம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது.
இருபது, முப்பது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் துப்பாக்கி நிழலில்தான் காஷ்மீர் மக்கள் வதைபட்டு வாழ்கின்றனர்.

துப்பாக்கியின் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வாழும் அவர்களது அன்றாட வாழ்க்கை சொல்லணாத் துயரம் கொண்டது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ஆயிரத்தெட்டு சோதனைச் சாவடிகள், விசாரணைகள் என்று தினமும் அரசு பயங்கரவாதத்தின் ஆட்சியில்தான் காலம் தள்ளி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிறகும் காஷ்மீர் அடிபணியவில்லை.

சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவை போல அந்த போராட்டம் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது.

துணைக்கண்டத்தில் மிகப்பெரிய இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு காஷ்மீர் மக்கள் நடத்தும் இந்த போராட்டம் ஒரு காவியம் போல காலத்தை வென்று வருகிறது.
வினவு
read more...

6 ஜூலை, 2010

கேலிக்கூத்தாகும் மக்களாட்சி??

உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான்.

நமது அரசியல்வாதிகள், எந்த அளவுக்கு மக்கள் தரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்குத் தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2005-ல் ரூ.12 ஆயிரமாக இருந்த அவர்களது ஊதியம் ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே மேலும் ரூ.4,000 அதிகரிக்கப்பட்டு ஊதியம் ரூ.20 ஆயிரமாக உயர்ந்தது.

அடுத்த நிதியாண்டில் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதியம் 2008 மே மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டு ரூ.30 ஆயிரமாகியது. 2009 பிப்ரவரியில்தான் ரூ.15 ஆயிரம் உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.45 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார். இதோ இப்போது மீண்டும் ஓர் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு மொத்த ஊதியம் ரூ.50 ஆயிரமாகஅதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, நமது சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இப்படி இத்தனை முறை ஊதிய உயர்வும், இந்த அளவுக்கு ஊதிய அதிகரிப்பும் தமிழகத்தில் வேறு எந்தத் தொழிலிலாவது, நிறுவனத்திலாவது யாருக்காவது அளிக்கப்பட்டிருக்குமா?

ஓர் அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமானால் சம்பளக் கமிஷன் அமைத்து அதன் பரிந்துரையின் மீது நிதி அமைச்சகம் பல விளைவுகளையும் அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகு நான்கோ, ஐந்தோ, ஆறோ வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஷயத்தில் அப்படி எதுவுமே தேவையில்லை. எப்போதெல்லாம் முதல்வராக இருப்பவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஓர் அறிவிப்பை வெளியிடுவார்.அத்தனை உறுப்பினர்களும் கட்சி மனமாச்சரியங்களை மறந்து உற்சாகமாக மேஜையைத் தட்டி வரவேற்பார்கள். இடதுசாரிகள் இந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவர்கள். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டே ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்வார்கள்.

இதற்கு முன்பே ஒருமுறை நாம் குறிப்பிட்டிருந்தபடி, தாங்களே தங்களது ஊதியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் கேலிக்கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி விழ வேண்டும். எந்த ஊதிய உயர்வும் அடுத்து வரும் சட்டப்பேரவைக்குத்தான் பொருந்தும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டும்தான் இப்படிப்பட்ட விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி விழும்.

ஊதிய உயர்வைவிட அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை இப்போதைய சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனி காலனி அமைக்கப் போவதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டரை கிரவுண்டில் வீட்டு மனை வழங்கப்படும் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு.

முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வந்ததுதான் தாமதம்,கட்சி மனமாச்சரியங்களை மறந்து நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவசர அவசரமாக ஒரு கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்டு முதல்வரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்கள்.கிடைப்பதை வாங்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அத்தனை அவசரம். என்ன கொடுமை இது?

சோழிங்கநல்லூர் பகுதியில் சந்தை மதிப்புப்படி ஒரு கிரவுண்ட் வீட்டு மனை குறைந்தது அரை கோடி ரூபாய் என்கிற நிலைமை இருக்கும்போது உறுப்பினர்களுக்குத் தலா இரண்டரை கிரவுண்ட் அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான விஷயம். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்து அங்குள்ள மக்களால் தங்களது தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீட்டு மனை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? மக்கள் சேவையில் (?) ஈடுபடும் உறுப்பினர்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரவர் தொகுதியில் வீட்டுமனை அளிக்கிறோம் என்று சொன்னால்கூட அர்த்தம் உண்டு.

சென்னையில்,அதுவும் மிக அதிகமான சந்தை விலையுள்ள இடத்தில் இவர்களுக்கு எதற்காக வீட்டுமனைகளை அரசு ஒதுக்கித் தர வேண்டும்?

இப்போதெல்லாம் இன்னொரு விபரீதமும் அரங்கேறுகிறது. ஒவ்வொரு கூட்டத் தொடரின் முடிவிலும் முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளிப்பது எங்கே தெரியுமா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்! ஆண்டுதோறும் இதற்காகும் செலவு எத்தனை லட்சங்கள் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இது என்ன அவலம் என்று குரல் எழுப்பினால், சாமானியர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்ணக் கூடாதா என்று குதர்க்கம் பேசுவார்கள்.

ஒன்று மட்டும் தெரிகிறது - வாக்களித்துவிட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் "சாமானியன்' முட்டாள். வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அவரது வயிற்றில் அடிக்கும் 'சாமானியன்' புத்தி சாலி!
read more...

8 ஜூன், 2010

'என் சொத்து பிள்ளைகளுக்கல்ல சமூகத்துக்கு' - அஸீம் ஹாஸிம் பிரேம்ஜி

வாஷிங்டன்:பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.ஆனால் அது 'சமூகத்தின் பயன்பாட்டுக்கே போகவேண்டும் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும்' என்கிறார் பிரபல ஐடி தொழிலதிபர் அஸிம் பிரேம்ஜி. இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஸிம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் 600 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கி வருகிறார் பிரேம்ஜி.

இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக,இதனை மேற்கொண்டுள்ளார் அவர். 10 வயதாகும் மாணவர்களால்,சொந்த தாய்மொழியில் சுயமாக எழுத முடியாத அளவுக்கு இந்திய அடிப்படைக் கல்வி மோசமாக உள்ளது.இந்த நிலையை மாற்றவே கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் இந்தப் பணியை அஸிம் பிரேம்ஜி மேற்கொண்டுள்ளார்.

அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா, பிரிட்டன் மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பில் கேட்ஸ் என்றால் அது அஸிம் பிரேம்ஜிதான் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையில் அஸிம் பிரேம்ஜியின் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில்,தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும்,தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் அஸிம் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.

"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன்.என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும்.பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற பரம்பரை வழக்கம் உள்ளது.என்னைப் பொறுத்தவரை,பெற்றோரின் பெரும்பகுதி சொத்துக்கள் சமூகத்துக்கே சேர வேண்டும்.

"உனக்கு யார் அதிகம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு அதைவிட அதிகமாகத் திருப்பிக் கொடு என்பதுதான் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த தத்துவம்." என்கிறார் பிரேம்ஜி.

உங்களது பெரும் சொத்துக்களில்,பவுண்டேஷனுக்காக எவ்வளவு தரப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு அஸிம் பிரேம்ஜி தந்துள்ள பதில்:

"சிலர் நான் ரூ 450 கோடி தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையில்லை. அதைவிட அதிகமாகவே அறக்கட்டளைக்கும் சமூகப் பணிகளுக்கும் தரப் போகிறேன்.என் சொத்து பிள்ளைகளுக்கல்ல சமூகத்துக்கு" என்கிறார்.

தனது சமூகப் பணிகளை சரியாக நிறைவேற்ற,விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் எஞ்ஜினீயரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனுராக் பிகாரியை, விப்ரோ பவுண்டேஷனுக்கு மாற்றியுள்ளார்.பிரேம்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இந்த அனுராக்.

17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28வது பணக்காரராக இருக்கும் அஸிம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தனிப்பட்ட தனது வாழ்க்கையில் மிகுந்த எளிமையையும் சிக்கனத்தையுவம் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் பிரேம்ஜி. இதுபற்றி சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கிள் பத்திரிகை குறிப்பிடுகையில்,"பெரும் கோடீஸ்வரரான அஸிம் பிரேம்ஜி நிஜத்தில் மிக மிக எளிய வாழ்க்கையையே வாழ்கிறார்." என்கிறது.

"இன்றும் தனது பழைய ஃபோர்டு காரையே பயன்படுத்தும் பிரேம்ஜி, சமயத்தில் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் போகவும் தயங்குவதில்லை. அவரது மனைவி இன்னும் ஒரு பழைய பியட் காரைத்தான் ஓட்டுகிறார். தனது நிறுவன கேண்டீன்களில் உணவு வீணாவதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.தேவையின்றி விளக்குகள் எரிவதைக் கண்டால் மிகக் கோபமடைவார்.நேரம் இருந்தால் தனது துணிகளை தானே சலவை செய்து கொள்கிறார்."

இவையெல்லாம் பல்வேறு தருணங்களில் பிரேம்ஜியைப் பற்றி மீடியாவில் வெளிவந்த செய்திகள்.

"ஆனால் அவரது இவையெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களல்ல பெருமை கொள்ள வேண்டியவை.இந்த சமூகத்தின் மீது ஒரு பெரும் தொழிலதிபர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடுகள். இன்னொரு பக்கம் அவர் தனது பெரும் சொத்துக்களையே,சமூக மாற்றத்துக்காக செலவழிக்கிறார் என்ற உண்மை, அவரைப் பற்றி அனைத்து மதிப்பீடுகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது" என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
source:thatstamil
read more...

24 மே, 2010

துடிக்​காத துப்​பாக்​கி​கள்!

என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெரிக்காவுக்கு உணர்த்​தி​விட்​டது.​

​ஆப்​கா​னிஸ்​தா​னில் கடந்த சில ஆண்​டு​க​ளா​கவே தங்கி சண்டை போட்டு​வ​ரும் அமெ​ரிக்​கா​வுக்கு,​​ இந்​தத் தலி​பான்​களை நம்​மால் அடக்​கவே முடியவில்லையே ஏன்? என்ற கேள்வி மண்​டை​யைக் குடைந்து கொண்​டி​ருந்​தது.​

​அமெ​ரிக்க ராணு​வத்​தின் ஆய்​வுப் பிரிவு களத்​தில் சென்று செய்த சில ஆய்​வு​க​ளுக்​குப் பிற​கு​தான் கோளாறு எங்கே என்று தெரி​ய​வந்​தது.​

​அமெ​ரிக்கா இப்​போது எம்-​4 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​து​கி​றது.​ இது மிக​வும் நவீ​ன​மான துப்​பாக்கி என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​ 5.56 மில்லி மீட்​டர் குறுக்​க​ள​வுள்ள குண்​டு​கள் இதில் பயன்படுத்தப்படுகின்​றன.​ ​

​வியட்​நாம் போரில் பயன்​ப​டுத்​திய எம்-​16 ரக துப்​பாக்​கியை மேம்​ப​டுத்தி,​​ நவீ​னப்​ப​டுத்​தி​ய​தன் மூலம்​தான் எம்-​4 உரு​வாக்​கப்​பட்​டது.​ அப்​ப​டி​யி​ருந்​தும் இது பயன் தரா​மல் இருப்​பது ஏன் என்று ஆய்​வுக்​குழு இப்​போது கண்​டு​பி​டித்​து​விட்​டது.​

​தலி​பான்​கள் நவீன துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தா​மல்,​​ இன்​னும் பழைய​கால துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்​து​கின்​ற​னர்.​

முதல் கார​ணம்,​புதிய துப்​பாக்​கி​க​ளுக்கு நிறைய செல​வ​ழிக்க வேண்டும்.​ அடுத்து,​​ பழைய துப்​பாக்​கி​க​ளைக் கையாண்ட அனு​ப​வம் தரும் நம்​பிக்கை கார​ண​மாக துப்​பாக்​கியை மாற்​றிக்​கொள்ள அவர்​கள் விரும்​ப​வில்லை.​ மூன்​றா​வ​தாக,​​ தங்​க​ளு​டைய எதி​ரி​களை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்த பழைய துப்​பாக்​கி​களே தலிபான்களுக்​குப் போது​மா​ன​தாக இருக்​கின்​றன.​

​அமெ​ரிக்கா பயன்​ப​டுத்​தும் எம்.-​4 ரக நவீன துப்​பாக்​கி​கள் சில நிமி​ஷங்​க​ளுக்​கெல்​லாம் ஏரா​ள​மான குண்​டு​களை துரி​த​க​தி​யில் உமிழ்ந்துவிடு​கின்​றன.​ இந்​தத் துப்​பாக்கி வியட்​நா​மி​லும் ஈராக்​கி​லும் ஓர​ள​வுக்​குப் பலன் தந்​த​தற்​குக் கார​ணமே எதி​ரி​கள் நகர்ப்​பு​றங்​க​ளில்,​​ மிக அரு​கில் வந்து சிக்​கி​ய​து​தான்.​ வியட்​நா​மில் நக​ரங்​க​ளி​லும் காடு​க​ளி​லும் எதி​ரி​களை மிக நெருக்​க​மாக சந்​தித்து சுட்​ட​னர்.​ எனவே இந்​தத் துப்​பாக்​கி​க​ளின் கொல்​(லும்)​திறன் கூடு​த​லாக இருந்​தது.​

​ஈராக்​கில் பாக்​தாத்,​​ ரமாடி,​​ பலூஜா போன்ற நக​ரங்​க​ளில்​தான் அமெரிக்கப் படை​கள் அதி​கம் சுட்​டன.​ அங்​கெல்​லாம் எதி​ரி​கள் மிக அரு​கில் வந்து துப்​பாக்​கிக் குண்​டு​களை வாங்​கிக் கொண்​ட​னர்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னமோ மலைப் பாங்​கான பகுதி.​ இங்கே தலி​பான்​க​ளைப் பார்த்து அமெ​ரிக்க வீரர்​கள் சுட்​ட​துமே அந்த குண்​டு​கள் சீறிப்​பாய்ந்​தா​லும் எதி​ரி​கள் இருக்​கு​மி​டம் அரு​கில் செல்​லும் போது வேகம் குறைந்து,​​ இலக்கி​லி​ருந்து விலகி தாக்​கு​வ​தால் தாக்​கு​த​லுக்கே வலு​வில்​லா​மல் போய்​வி​டு​கி​றது.​

​தலி​பான்​கள் அமெ​ரிக்க வீரர்​கள் வரு​வ​தைக் கவ​னிக்​கா​மல் எங்​கா​வது பார்த்​துக் கொண்​டும்,​​ போய்க்​கொண்​டும் ​ இருந்​தா​லும் அமெ​ரிக்க துப்பாக்​கி​க​ளின் சத்​தம் அவர்​களை உஷார்​ப​டுத்​தி​வி​டு​கி​றது.​ அத்​து​டன் அந்த குண்​டு​கள் வலு​வில்​லா​மல் இருப்​ப​தால் சாதா​ரண தடுப்​பு​கள் மூலமே தலி​பான்​கள் அடி​ப​டா​மல் தப்பி விடு​கின்​ற​னர்.​ அதே சம​யம் அவர்​கள் வைத்​துள்ள பழ​மை​யான துப்​பாக்​கி​கள் 2,000 அடி முதல் 2,500 அடி வரை​யுள்ள இலக்​கு​க​ளைக்​கூட ஊடு​ரு​விச் செல்​லக்​கூ​டி​யவை.​ எனவே தலி​பான்​கள் திருப்​பிச்​சுட்​டால் அந்த குண்​டு​கள் அமெரிக்க வீரர்​கள் மீதும் அவர்​க​ளு​டன் செல்​லும் இதர வீரர்​கள் மீதும் பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்​ப​டுத்​து​கின்​றன.​

​இந்த ஆய்வு கார​ண​மாக துப்​பாக்​கி​களை மாற்​றிக்​கொள்ள அமெ​ரிக்க ராணு​வத் தலைமை முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ அத்​து​டன் தன்​னு​டைய எல்லா படைப்​பி​ரி​வு​க​ளி​லும் குறி​பார்த்​துச் சுடும் திற​மை​யுள்ள வீரர்​கள் 10 அல்​லது 12 பேரை குழு​வாக நிய​மித்​துக் கொண்டு,​​ தலி​பான்​கள் பயன்​ப​டுத்​து​வ​தைப் போன்ற பழைய,​​ அதே சம​யம் வலு​வான துப்​பாக்​கி​களை அவர்​க​ளி​டம் தந்து தலி​பான்​க​ளுக்கு ஈடு கொடுக்க அமெ​ரிக்கா முடிவு செய்​தி​ருக்​கி​றது.​

​ஆப்​கா​னிஸ்​தா​னர்​களை முத​லில் அடக்க முற்​பட்ட பிரிட்​டி​ஷார் ​(1832-1842) பிரெய்ன் பெஸ் ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தி​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​களோ ஜெசைல் பிளிண்ட்​லாக்ஸ் என்​கிற பழைய ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்தி அவர்​க​ளு​டைய தாக்​கு​தல்​களை முறி​ய​டித்​த​னர்.​​

1980-களில் சோவி​யத் யூனி​ய​னைச் சேர்ந்த ராணுவ வீரர்​கள் ஏ.கே.​ 47 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​திப் பார்த்​த​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​கள் இரண்​டா​வது உல​கப் போரில் பயன்​ப​டுத்​தப்​பட்ட லீ-​என்​ஃ​பீல்டு ரக துப்​பாக்​கி​க​ளைக் கொண்டே அவர்​களை முறி​ய​டித்​த​னர்.​ இந்த ரக துப்​பாக்​கி​யில் பெரிய லீவ​ரும் போல்​டும் இருக்​கும்.​​

இப்​போது அமெ​ரிக்கா எம்.​4 ரக துப்​பாக்​கி​க​ளுக்​குப் பதி​லாக எம் 110 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்த முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ இவை 2,500 அடி தொலை​வு​வரை பாய்ந்து இலக்​கு​களை நாசப்​ப​டுத்​தும்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னிய தலி​பான்​கள் போர்த் திறத்​தைத் தங்​க​ளு​டைய மூதா​தை​யர்​க​ளி​ட​மி​ருந்து பெற்​றி​ருப்​ப​தால்,​​ காலத்​துக்​கேற்ற நவீன ரகங்​களை நாடா​மல்,​​ போர்க்​க​ளத்​துக்​கேற்ற நம்​ப​க​மான துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.

எது எப்படியோ மேலே சொன்னது போன்று என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெ​ரிக்​கா​வுக்கு உணர்த்​தி​விட்​டது.
source:dinamani
read more...