தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 பிப்., 2011

சிறு குருவி வடிவில் உளவு இயந்திரம்

பென்டகன்,பிப்.21:பதினாறு சென்டி மீட்டர் அளவுள்ள சிறு குருவி போன்ற உளவு இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெண்டகனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு மில்லியன் டாலர் செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி இயந்திரம் போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.

இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும்.

சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
read more...

3 பிப்., 2011

கணினியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்










பிப்.3:உடற்பயிற்சி, வீட்டுப் பணிகள், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். கணினி பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த ஃபைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், "பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?" என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய ஃபைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும்.

ஃபைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த ஃபைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:
இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல.

இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.

இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.

மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்: ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள்.

குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.

இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்:
டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:
திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.

இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

ஒரே ஒரு பேக் அப் அபாயம்:
பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
read more...

17 ஜன., 2011

காமசூத்ரா ஃபயல் எச்சரிக்கை - உங்கள் கணினிகளை ஹேக்கர்களுக்கு அடிமையாக்கும்

வாஷிங்டன்,ஜன.17:காமசூத்ரா என்ற பெயரில் உங்கள் இ-மெயில் ஐ.டிக்கு வரும் ஃபயல்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அதனை நீங்கள் ஓப்பன் செய்தால் உங்கள் கணினிகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

கணினி பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. ஒரு டஜனுக்கும் அதிகமான பாலியல் பொழுதுபோக்கு வழிகளை அறிமுகப்படுத்துவதாக கூறி இந்த பவர்பாயிண்ட் ஃபயல் உங்கள் மின்னஞ்சலுக்கு வருகை தரலாம்.

Real kamasutra.pps.exe என்ற பெயரில் வரும் ஃபயல்களைக் கண்டால் உண்மையான பவர்பாயிண்ட் ஃபயல்கள் எனத் தோன்றும். ஆனால், நீங்கள் அந்த ஃபயல்களை திறந்தால் வெகுதொலைவிலிருக்கும் ஹேக்கர்கள் உங்கள் கணினிகளை தங்களுடைய ப்ரோக்ராம்களின் படி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நிலை ஏற்படும். ஸோஃபோஸ் என்ற நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

வைரஸ் ப்ரோக்ராம்களை ரன் செய்யும் பொழுது உங்கள் கணினியில் உள்ள அனைத்து ஃபயல்களும் ஹேக்கர்களால் கையாள இயலும். கீ போர்டில் நீங்கள் டைப் செய்யும் அனைத்து விபரங்களும் ஹேக்கர்களுக்கு தெரியும் என்பதால் உங்களுடைய அனைத்து பாஸ்வேர்டுகளும், க்ரெடிட் கார்டு விபரங்களும் எளிதாக திருட இயலும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

6 நவ., 2010

கண்பார்வையற்றோர் பார்க்க புதிய எலக்ட்ரானிக் கருவி

லண்டன்,நவ.6:கண்பார்வையற்றோரின் கண்களுக்குள் (ரெட்டினா வுக்குள்) 3 மில்லி மீட்டர் விட்டமுடைய எலக்ரானிக் கருவி ஒன்றை இடுவதன் மூலம் கண்பார்வையற்றோர் பார்க்கலாம் என தற்போது நிரூபணமாகியுள்ளது.

பிரிட்டனில் இத்தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதல் முதலாக ஜெர்மனியில் பரிசோதனைக்கு பார்க்கப்பட்டுள்ளது. 3 மி.மி விட்டம் கொண்ட இச் சிறிய எலக்ரானிக் கருவி, சுமார் 1,500 ஒளிக் கீற்றுகளை உள்வாங்கி, அதனை பிம்பமாக மாற்றி மூளைக்குச் செல்லும் உணர்வு நரம்புகளுக்கு நேரடியாகச் செலுத்துகின்றன. இந்த அதீத கண்டுபிடிப்பால் பல பார்வையற்றோர் பயன்பெற இருக்கின்றனர்.

மனித குலமே வியக்கும் வண்ணம் இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக வியக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் கருவியைப் பொருத்திய நபர் ஒருவர் சில மணிநேரத்திலேயே, தனது பெயரை தானே வாசித்துக்காட்டி, சில பொருட்களையும் அடையாளம் காட்டியுள்ளார்.

பிரிட்டனில் இயங்கும் ஆக்ஸ்போர்ட் கண் மருத்துவமனை இது தொடர்பாக அதிக விபரங்களை வெளியிட்டுள்ளது.
read more...

16 அக்., 2010

ஓட்டுநர் இல்லாத வாகனம்

அக்.16:கடந்த நூற்றாண்டில் மிகப்பெரிய விஞ்ஞான தொழில்நுட்பமான இணையதளம் உலகை தன் வசப்படுத்தியது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வசப்படுத்துவது என்பதுக் குறித்த கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

எதனையும் உறுதியாக நம்மால் கூறவியலாது. பயோடெக்னாலஜி முதல் ஆரோக்கியத்துறை வரையும், கிரகங்களை நோக்கிய பயணம் முதல் பூமியின் அடிப்பகுதியை நோக்கிய பயணம் வரை பலவகையான ஆய்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில வெற்றியும் பெற்றுள்ளன.

தினந்தோறும் புதிய புதிய உபகரணங்களும், தொழில்நுட்ப வசதிகளும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில், உலகம் நம் கண் முன்னால் மாறிக்கொண்டே வருகிறது.

வரவிருக்கும் பெரிய மாற்றங்களில் ஒன்று வாகனங்களாகும். இவ்வளவு காலமும் வாகனங்களை ஓட்டுநர்களே ஓட்டி வந்தனர். அதாவது, ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டுமானால் ஒரு ஓட்டுநர் தேவை. ஓட்டுநர் இல்லையெனில் வாகனமில்லை.

ஆனால் இனிவரும் காலம் ஓட்டுநர்களில்லாத வாகனங்களின் காலமாகும். ஏற்கனவே சில நாடுகளில் ரெயில்கள் ஓட்டுநர் துணையின்றியே ஓடத் துவங்கிவிட்டன. ஆனால், இனி வரும் காலங்களில் சாலையில் ஓடும் வாகனங்களை ஓட்டுவதற்கு ஆள் தேவையில்லை. நாம் ஏறியிருந்தால் போதும், வாகனம் தானாகவே செல்லும்.

பயணத்தின் வழிமுறைகளையெல்லாம் வாகனம் பார்த்துக் கொள்ளும். ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் அதாவது செயற்கையான புத்தி வாகனங்களை சுயமாக கற்றுக் கொடுக்கிறது.

நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் எவ்வளவு நெரிசலான போக்குவரத்தைக் கொண்ட சாலையிலும் சுகமாக பயணிக்கலாம். பிரபல இணையதள தேடுதல் எந்திர நிறுவனமான கூகிள்தான் இத்தகைய வாகனங்களை பரிசோதனை முறையில் ஓட்ட துவங்கியுள்ளது.

அமெரிக்க சாலைகளில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இவ்வாகனம் சுயமாக ஓடியுள்ளது. மனிதர்களின் தலையீடு இதில் மிகக்குறைவே. ஒரேயொரு விபத்து மட்டுமே ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னலில் வாகனம் நின்றபொழுது பின்னால் வந்த வாகனம் மோதிய விபத்தாகும் அது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

read more...

12 செப்., 2010

3D ஒரு அதிசயம்:இனி படங்களை தொட்டுப் பார்க்கலாம்!

டோக்கியோ,செப்.12:3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன.

3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம்.அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால்,நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம். குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன.

இதன் அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள்,வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.
read more...

5 செப்., 2010

மருத்துவ உலக பயன்பாட்டில் ஐஃபோன்!

செப்.5:மருத்துவ உலக பயன்பாட்டில் தற்போது ஐஃபோன் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. ஆம் உலகெங்கும் உள்ள மருத்துவர்களுக்கான பிரதான அடையாளம் ஸ்டெதஸ்கோப். இனி இந்த அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இணையதளம் மின்னஞ்சல் மற்றும் நகல் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.

இனி இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஸ்டெதஸ்கோப்பாக பயன்படப் போகும் ஐபோனுக்கு 'ஐ&ஸ்டெதஸ்கோப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்,பல்வேறு வகைகளில் பயன்படுவதால் அதில் அதிக சக்தி வாய்ந்த கேமரா, சென்சார்கள், மைக் போன்ற கருவிகள் உள்ளன.

இவற்றை பயன்படுத்தியே நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கண்டறிய முடியும். ஐபோனை ஸ்டெதஸ்கோப்பாக பயன்படுத்துவதற்கான மாதிரி மென்பொருளை ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து இதுவரை 30 லட்சம் மருத்துவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சாதாரண மக்களும் செல்போனை பயன்படுத்தியே இதயத்துடிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏற்ப விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்கிறது ஆப்பிள் நிறுவனம்.

மருத்துவம் தொடர்பாக 6 ஆயிரம் பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் இப்போது பயன்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு டாக்டர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல் கூறுகின்றனர்.

read more...

உலகின் அதிவேக கம்ப்யூட்டர் சீனா தயாரிப்பு

பெய்ஜிங்,செப்.5:சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்பப்பிரிவு பல்கலைகழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது.

தியான்கி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது.

கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கம்ப்யூட்டர் களில் 5-வது இடத்தை இந்த வகை கம்ப்யூட்டர் பிடித்துள்ளது. 1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஒரு செகண்டிலேயே போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல்.

இந்த கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன்,பயோ மெடிக்கல்,வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி, செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்களை கண்டறியப்பயன்படுத்தவும் முடியும்.
read more...

29 ஜூலை, 2010

கம்ப்யூட்டர் உலகின் அடுத்த புரட்சி

ஜுலை29:உள்ளங்கையில் வைத்து பட்டனை தட்டினால்,கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?

ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், 'ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது.

இந்தப் புதிய கருவிக்கு, 'ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும்.

நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.

முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, 'சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில்,கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

read more...

21 ஜூலை, 2010

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்

மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக,உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து,ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
read more...

7 ஜூன், 2010

பிளாக்பெர்ரி செல்போனின் புதிய பரிணாமம்

மும்பை:மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.இது செல்போனாக மட்டுமல்லாமல்,ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.

இந்த பிளாக்பெர்ரி செல்போனின் பெயர் eUNO R10. வோடபோன் சேவையில் இந்த அதி நவீன வசதி இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில், கையடக்கமான, ஈசிஜி கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக் கொண்டு ஈசிஜி பார்க்கலாம்.பின்னர் இதன் முடிவுகளை வயர்லைன் ஏஅல்லது ஜிஎஸ்எம் செல்போன் மூலம் நமது டாக்டருக்கு அனுப்பி வைத்து அவருடையை ஆலோசனையைப் பெற முடியும்.

அதாவது எந்த லேபுக்கும்,டாக்டரிடமும்,மருத்துவமனைக்கும் செல்லாமல் நாமே ஈசிஜி பார்த்து ஆலோசனையை டாக்டரிடம் செல்போன் மூலமே பெற முடியும்.

இருப்பினும் பிளாக்பெர்ரி செல்போன்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.அதாவது நாம் எடுக்கும் அந்த ஈசிஜி அறிக்கை பிளாக்பெர்ரியின் சர்வருக்குப் போய் அங்கிருந்து டாக்டர் வைத்துள்ள பிளாக்பெர்ரிக்குப் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதி நவீன வசதி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.வோடபோன், பிளாக்பெர்ரி சேவைகளைக் கொண்டோர் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும்.
read more...

27 மே, 2010

பேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் 12 நாட்களில் உருவாக்கும் டையேஸ்போரா

நியூயார்க் கல்லூரி மாணவர்கள் பேஸ்புக்கிற்கு இணையாக புதிதாக
12 நாட்களில் உருவாக்கும் ஒபன் சோர்ஸ் சோசியல் நெட்வொர்க்கான
டையேஸ்போராவின் பிராஜெக்ட் வேலையை தொடங்கவுள்ளனர்.
பேஸ்புக்-ல் இருக்கும் பல குறைகளை தீர்க்கும் விதமாகவும், பேஸ்புக்-ல் நமக்கு வரும் பின்னோட்டத்தை அனைவரும் அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்கும்படியான வசதி இல்லை.

இப்படி பேஸ்புக்-ல் இருக்கும் பல குறைகளை நிறைவு செய்யும் விதம் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க எளிதான முறையில் நீயூயார்க் NYU கல்லூரி மாணவர்கள் பேஸ்புக்கிற்கு இணையான ஒரு சோசியல் நெட்வொர்க்கை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

12 நாட்களில் இதை உருவாக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்கு ஆகும் செலவாக $1,000,00 டாலர் பணத்தை நிர்ணயித்துள்ளனர்.

இவர்களின் லாஜிக் மிகச்சரியாக இருப்பதாக பல நிறுவனங்கள் அறிந்து பணஉதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இந்த ஒபன் சோர்ஸ் சோசியல் நெட்வொர்க்குகான பெயர் டையேஸ்போரா. ஜூன் 1ம் தேதியில் இருந்து இவர்களின் இந்த பிராஜெக்ட் வேலை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
read more...

25 மே, 2010

உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை உருவாக்கினர் விஞ்ஞானிகள்

உலகில் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

இதன் உதவியுடன் இப்போது இருப்பதை விட மிகச்சிறிய அளவிலும்,​​அதிவேகமாகவும் செயல்படும் சூப்பர் ஃபாஸ்ட் கம்யூட்டர்களை உருவாக்குவது சாத்தியமாகும்.

இந்த புதிய டிரான்சிஸ்டர்,​​ ஒரு மீட்டரில் 400 கோடி ஒரு பங்கு நீளமுடையது.​ மிகமிகச் சிறியதாக இருந்தாலும் இது சாதாரண டிரான்சிஸ்டர்கள் போலவே செயல்படும்.


இதனை மைக்ரோஸ்கோப் கொண்டே சரியாகப் பார்க்க முடியும்.​ இது மிக அற்புதமான கண்டுபிடிப்பு.​ விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல்கல்.​ சிலிக்கானைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.​ பரிசோதனை முறையில் இந்த டிரான்சிஸ்டர் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றுள்ள மைக்கேல் சைமன்ஸ் கூறியுள்ளார்.
read more...

13 மே, 2010

இனி ஃப்ளாப்பி டிஸ்கிற்கு குட்பை

டோக்கியோ:ஃப்ளாப்பி டிஸ்க்குகள் இனி நினைவில் மட்டும். ஜப்பான் நிறுவனமான ஸெமி ஃப்ளாப்பி டிஸ்க்குகளின் விற்பனையை இந்த வருட இறுதியில் நிறுத்த முடிவெடுத்துள்ளது.

தற்காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்குகளை எவரும் பயன்படுத்துவதில்லை. 3.5 இஞ்ச் அளவுடைய ஃப்ளாப்பி டிஸ்க்குகள் துவக்க கால கம்ப்யூட்டர் பயனீட்டாளர்களின் மாறாத நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கும்.

தற்போதைய இளைய தலைமுறைகளில் ஃப்ளாப்பி டிஸ்க்கை பார்க்காதவர்களும் உண்டு. ஃப்ளாப்பியை விட பல மடங்கு விவரங்களை(டேட்டா) சேகரிக்கும் திறன் கொண்ட யு.எஸ்.பி ஃப்ளாஷ் ட்ரைவ்கள் மற்றும் சி.டிக்களின் வருகை ஃப்ளாப்பிகளின் காணாமல் போக காரணமாயின.

ஒரு சிறுவிரல் அளவுடைய ஃப்ளாஷ் ட்ரைவில் ஒரு ஃப்ளாப்பியில் அடங்கும் டேட்டாக்களை விட ஆயிரம் மடங்கு டேட்டாக்களை சேகரிக்கும் திறன் உள்ளது.

தற்போதைய கம்ப்யூட்டர்களில் ஃப்ளாப்பிகளை செருகும் ட்ரைவ்கள் இல்லை. 2003 ஆம் ஆண்டே டெல் நிறுவனம் கம்ப்யூட்டர்களில் ஃப்ளாப்பி ட்ரைவ்களை மாற்றிவிட்டது. ஃப்ளாப்பி டிஸ்க்குகளின் விற்பனையில் சந்தையில் 70 சதவீதமும் ஜப்பான் நிறுவனமான சோனியுடையதாகும். சர்வதேச சந்தையில் 1981 ஆம் ஆண்டு சோனி ஃப்ளாப்பி டிஸ்குகளை அறிமுகப்படுத்தியது. சி.டிக்களும், ஃப்ளாஷ் ட்ரைவ்களும் வருகைக்கு முன்னர் ஃப்ளாப்பி டிஸ்குகள் தகவல் பரிமாற்றத்திற்கு பிரசித்திப் பெற்றிருந்தது.

தற்பொழுது எவரேனும் ஃப்ளாப்பியை உபயோகிப்பதையே நகைக்கதக்கதாக கருதுவோரும் உண்டு. ஆனாலும் ஜப்பான் மற்றும் இந்தியாவில் அது பிரபலமாகத்தான் இருந்தது. "நான் ஸ்கூலில் படிக்கும் பொழுதுதான் கடைசியாக ஃப்ளாப்பியை பயன்படுத்தினேன்" என்கிறார் ஒரு டெக்னாலஜி வெப்சைட்டின் எடிட்டர் காட் ஹன்னா ஃபோர்ட்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

15 ஏப்., 2010

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'கிரையோஜெனிக்' என்ஜின் மூலம் இன்று விண்ணில் பறக்கிறது ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவீன அம்சங்களுடன் கூடிய ஜிசாட்4 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "கிரையோஜெனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.

50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் மொத்தம் 416 டன் எடை கொண்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ரூ. 420 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளோடு "கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் வைத்துள்ள 6வது நாடாக இந்தியாவும் இடம்பெறும்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை புவிசுற்று வட்டப்பாதையில் செலுத்துவதில் "கிரையோஜெனிக்' என்ஜின் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதால், இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக இது இருக்கும்.

ஏறத்தாழ 1,022 விநாடிகளில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில், புவி வட்ட மாற்றுப் பாதையில் ஜிசாட்4 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் நிலை நிறுத்தும். இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் புதன்கிழமை காலை 11.27 மணிக்கு தொடங்கியது.

19 ஆண்டுகள் உழைப்பு:
ஏறத்தாழ 19 ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பிறகு இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே "கிரையோஜனிக்' என்ஜினை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.

திட, திரவ, குளிர்விக்கப்பட்ட வாயு (கிரையோஜெனிக்) என மூன்று அடுக்குகளில் எரிபொருள்களைப் பயன்படுத்தும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்விக்கப்பட்ட வாயு பயன்படுத்தப்படும் மூன்றாவது நிலையில் "கிரையோஜெனிக்' (குளிர்விப்பு) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரவ ஆக்சிஜனும், திரவ ஹைட்ரஜனும் எரிபொருள்களாகப் பயன்படுத்தப்படும். ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்படும்.

ஜிசாட்4 செயற்கைக்கோள்:
2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்4 செயற்கைக்கோளில், 'கே' பேண்ட் டிரான்ஸ்பாண்டர், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய 'ககன்' பேண்ட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

'கே'பேண்ட்கள்:
'கே' பேண்ட் டிரான்ஸ்பாண்டரில் உள்ள 8 பீம்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கலாம். இதன் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் சிக்னல்களை வழங்க முடியும். துல்லியமான டி.டி.எச். சேவை, செல்போன் சேவை, ஆன்லைன் வர்த்தகம், அதிவேக இன்டர்நெட், கூடுதல் ஏ.டி.எம். மையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கு கே பேண்ட் டிரான்ஸ்பான்டர் உதவும்.

'ககன்' பேண்ட்கள்:
ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ககன் பேண்ட்கள், விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த உதவும். குறிப்பாக, விமானங்கள் துல்லியமாக தரையிறங்க இவை பயன்படும். ஜிசாட்4 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
source:dinamani
read more...

31 மார்., 2010

பெருவெடிப்பு(Big bang):இரண்டாம் கட்ட சோதனை வெற்றி

ஜெனீவா:பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.ஏழு ட்ரில்லியன் எலக்ட்ரான் வால்ட் செறிவூட்டப்பட்டநிலையில் ஒளியின் வேகத்தில் சஞ்சரிக்கும் இரண்டு புரோட்டான் துகள்களை மோதவிட்டு இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றிக்கிடைத்துள்ளது.
அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம்.

இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும். இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்'(CERN), பூமிக்கடியில் 27 கி.மீ. அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் எல்.ஹெச்.சி பரிசோதனை ஆரம்பித்திருந்தாலும் இயந்திரக்கோளாருகள் காரணமாக சில தினங்களுக்குள்ளாக பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் பரிசோதனை ஆரம்பமானது.கடந்த 19 ஆம் தேதி 3.5 ட்ரில்லியன் எலக்ட்ரான் வால்ட் செறிவூட்டப்பட்டநிலையில் புரோட்டான் அணுக்களை எதிர்திசைகளில் சஞ்சரிப்பதில் விஞ்ஞானிகள் வெற்றிக்கண்டனர்.
வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இந்த வெற்றியின் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.
read more...

12 மார்., 2010

சீனா:மனித உரிமை சேவகர்களின் ஜி மெயிலில் அத்துமீறி நுழைவு

வாஷிங்டன்:சீனாவில் செயல்படும் மனித உரிமை ஊழியர்களின் ஜி மெயில் அக்கவுண்டுகளில் வெளியேயுள்ளவர்கள் அத்துமீறி நுழைவதாக கூகிள் துணைத் தலைவரும் துணை கவுன்சலுமான நிக்கோலா வோங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கூகிளின் செயல்பாடு ஹாக்கரிகளின் தாக்குதல் மூலம் பாதுகாப்பு பிரச்சனையை சந்தித்து வரும் வேளையில் கூகிளின் ஜிமெயில் அக்கவுண்டுகளிலும் இத்தகைய அத்துமீறி நுழைவு நடந்து வருகிறது.

கூகிள் சீனாவில் தனது சேவையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இணையதளத்தின் ஒளிவு மறைவற்றத் தன்மையை அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், தூதரக நடவடிக்கைகள், வெளிநாட்டு உதவி, மனித உரிமை தலையீடுகள் ஆகிய பல்வேறு துறைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று வோங் தெரிவித்தார்.

ஆனால் சீனாவில் சேவையை நிறுத்துவதால் ஒரு பயனும் இல்லை என்றும், ஒரு வேளை அவர்கள்(சீனா) விரும்புவதே இதுவாக(சேவையை நிறுத்துவது)இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ப்ராட் ஷெர்மன் கூறுகிறார்.

பிரச்சனையை தீர்ப்பதற்கு நவீன தொழில் நுட்பத்தை கண்டறிவதற்கான முயற்சிச் செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
read more...

29 ஜன., 2010

ஐ-பேட் என்ற பெயரில் புது வகையான கணினி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடு


உலகின் முன்னனி கணினி நிறுவனமான ஆப்பிள், ஐ-பேட் என்ற பெயரில் புது வகையான கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது உலக அளவில் பிரபலமான செல்போனாக விளங்கும் ஐ-போனை விட அளவில் சற்று பெரிதாக இருக்கும் இந்த ஐ-பேடில் கணினிக்குறிய அனைத்து வசதிகளும் இருக்கும்.

சுமார் 430 முதல் 850 டாலர்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ள ஐ-பேட் ஜுன் மாதத்தில் கணினி சந்தையில் கிடைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MS-office போன்று இதற்கென்று I-Works என்ற பிரத்யோகமான மென்பொருளையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது சந்தையில் உள்ள கணினியில் இருக்கும் முக்கிய சிறப்புகளான புகைப்பட கருவி மற்றும் ப்ளாஷ் இல்லாதது பெரும் குறையே. எனினும் இக்கணினியின் வடிவமைப்பு வாடிக்கையாளர்களை வாங்க தூண்டும் என அறிமுக விழாவில் பேசிய தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறினார்.
read more...

14 ஜன., 2010

கூகுள் போன்: படமெடுத்தாலே உடனே விவரம் அளிக்கும்

எவ்வளவு உயரமான மலை! என்ன அழகான ஓவியம்! என வியந்து, அது பற்றி தகவல் அறிய விரும்புபவர்கள், அதை மொபைலில் படமெடுத்தாலே போதும், தகவல்களை உடனே அறிந்து கொள்ளலாம். இதற்காக, கூகுள் நிறுவனம், பிரத்தியேக மொபைல் பயன்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில், "கூகுள்ஸ்' என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்த, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர், மொபைல் இணையதளங்களில் தேடுதல் நடத்தலாம். இதற்காக, வார்த்தைகளோ, கீ வேர்டுகளோ டைப் செய்ய தேவையில்லை. அந்த பொருளை மொபைல் போனில் படம் எடுத்தாலே போதுமானது. அதுபற்றிய தகவல்கள் மொபைல் போனில் உடனே வந்துவிடும்.

கூகுள் நிறுவனத்தின் மொபைல் போன் பயன்பாட்டு பிரிவு துணை தலைவர் விக் கண்டோத்ரா கூறியதாவது: "புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள, 'கூகுள்ஸ்' அப்ளிகேஷன், படப் போஸ்டர்கள், வைன் லேபிள்கள், கலைப் பொருட்கள், கட்டடங்கள், நில அடையாளங்கள் உட்பட சில குறிப்பிட்ட பிரிவில் சிறப்பாக செயல்படும். தற்போது, இதன் பயன்பாடு, குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தகவல்களையும் அறியும் வகையில், இதை விரிவுபடுத்துவதே, எங்கள் நோக்கம். இது ஒரு துவக்கமே". இவ்வாறு விக் கண்டோத்ரா கூறினார்.
read more...