இதன் உதவியுடன் இப்போது இருப்பதை விட மிகச்சிறிய அளவிலும்,அதிவேகமாகவும் செயல்படும் சூப்பர் ஃபாஸ்ட் கம்யூட்டர்களை உருவாக்குவது சாத்தியமாகும்.
இந்த புதிய டிரான்சிஸ்டர், ஒரு மீட்டரில் 400 கோடி ஒரு பங்கு நீளமுடையது. மிகமிகச் சிறியதாக இருந்தாலும் இது சாதாரண டிரான்சிஸ்டர்கள் போலவே செயல்படும்.
இதனை மைக்ரோஸ்கோப் கொண்டே சரியாகப் பார்க்க முடியும். இது மிக அற்புதமான கண்டுபிடிப்பு. விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல்கல். சிலிக்கானைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முறையில் இந்த டிரான்சிஸ்டர் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றுள்ள மைக்கேல் சைமன்ஸ் கூறியுள்ளார்.
0 கருத்துகள்: on "உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை உருவாக்கினர் விஞ்ஞானிகள்"
கருத்துரையிடுக