இஸ்ரேலில் ராணுவ ரகசியங்களைத் திருடியது தொடர்பாக அனத் காம் (23) என்ற பெண் விசாரணைக்காக திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த காம், நீதிமன்ற விசாரணைக்காக டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் கூறுகையில், "இஸ்ரேல் ராணுவத்தின் கொள்கைகளை, பாலஸ்தீனியர் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் இவ்வாறு செய்தேன்' என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த 2005 முதல் 2007 வரை இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய போது, ராணுவ செயல்பாடுகள், தளவாடங்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் முக்கிய ஆவணங்களைத் திருடியதாக அனத் காம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
0 கருத்துகள்: on "இஸ்ரேல்:ராணுவ ரகசியம் திருட்டு தொடர்பாக பெண்ணிடம் மீண்டும் விசாரணை"
கருத்துரையிடுக