சியோல்:வடகொரியத் தாக்குதலிலேயே தென்கொரிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக சர்வதேச விசாரணைக் குழு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து வடகொரியாவுடனான வர்த்தக உறவுகளை தென்கொரியா இடைநிறுத்தியுள்ளது.
அத்துடன் தமது தாக்குதலில் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமைக்கு வடகொரியா மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.
தமது போர்க்கப்பலான செனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் மூழ்கியதுடன் 46 பேர் பலியானார்கள்.இந்நிலையில் இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென தென்கொரிய ஜனாதிபதி லீ முயங்பக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடகொரியக் கப்பல்கள் தென்கொரிய கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,வடகொரிய விவகாரம் குறித்து சீனா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு வழங்கி செயற்படவேண்டுமென அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் சீனாவை கோரியுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற அமெரிக்கசீன மாநாட்டிலேயே இவ்வாறு கூறியுள்ள ஹிலாரி கிளின்டன்,இத்தாக்குதல் விவகாரம் குறித்து வடகொரியா பொறுப்புக் கூறவேண்டுமெனவும் தெரிவித்தார்.
சீனா வடகொரியாவின் நெருங்கிய ஒரேயொரு நட்பு நாடாக உள்ள போதும் தென்கொரிய தாக்குதல் சம்பவம் குறித்து தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்றது.
உலகிலுள்ள மிக மோசமான போர்த்தனம் கொண்ட நாடான வடகொரியாவுடன் பகிரப்பட்டுள்ள எல்லை குறித்து சீனா மறக்க முயற்சிப்பதாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய தொலைக்காட்சி உரையாடலில் தென்கொரிய ஜனாதிபதி லீ கூறியுள்ளார்.
source:BBC
0 கருத்துகள்: on "வடகொரியாவுடனான வர்த்தக உறவை தென்கொரியா இடை நிறுத்தியது"
கருத்துரையிடுக