26 மே, 2010

கோவா குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி சனாதன் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்

பனாஜி:மர்மகோவாவில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி மல்கோண்டா பாட்டீல் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பாட்டீல் சனாதன் சன்ஸ்தானின் ஸ்தாபகத் தலைவர் ஜெயந்த் பாலாஜி அத்வாலேயின் அறைக்கு அடுத்து வசித்திருந்தார்.

சனாதன் சன்ஸ்தாவின் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாட்டீல் அவ்வமைப்பின் முக்கிய உறுப்பினராவார்.பல்வேறு இடங்களில் இவ்வமைப்பின் கூட்டங்களை ஏற்பாடு செய்தது பாட்டீலாவார்.கோவா போண்டாவிலிலுள்ள ஆசிரமத்தில் பாட்டீல் தங்கியுள்ளார் என குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ கூறுகிறது.

குற்றப்பத்திரிகையை கடந்த வாரம் கோவா நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ சமர்ப்பித்துள்ளது. முதலில் குற்றவாளிகளுடன் தொடர்பில்லை என சனாதன் சன்ஸ்தான் மறுத்திருந்தது.

சனாதன் சன்ஸ்தானின் ட்ரஸ்டான தர்மபிரச்சார சபையின் மானேஜிங் ட்ரஸ்டியாக பணியாற்றியவர் பாட்டீல்.மர்மகோவாவில் வெடிப்பொருட்களுடன் செல்லும் பொழுதுதான் இவர் கொல்லப்பட்டார்.

மல்கோண்டா பாட்டீலும்,இன்னொரு குற்றவாளியான தனஞ்செய் அஷ்தேக்கரும் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜூனில் அதாவது குண்டுவெடிப்பிற்கு நான்கு மாதம் முன்பு குண்டுவைக்க ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஆசிரமத்தின் முதல் மாடியில் ஜயந்த் பாலாஜியின் அறைக்கு அடுத்துள்ள அறையில்வைத்துதான் இந்த ஆலோசனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கோவாவில் 5 இடங்களில் வெடிக்குண்டுவைக்க நடந்த திட்டத்தின் ஒரு பகுதியாகயிருந்தது மர்மகோவா குண்டுவெடிப்பு.

கோவா போலீஸின் சிறப்பு புலனாய்வு குழுவிடமிருந்து கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி என்.ஐ.ஏ புலனாய்விற்கான பொறுப்பை ஏற்றது.

11 குற்றவாளிகளுக்கெதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இருவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். நான்கு பேர் இப்பொழுது போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட ஐந்து பேரையும் கைதுச்செய்து விசாரித்தால் மட்டுமே வழக்கில் உண்மையான சதித்திட்டத்தை வெளிக்கொணரமுடியுமென்று 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ கூறுகிறது.

குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்களை எவ்வாறு பெற்றார்கள் என்பது குறித்து குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

குண்டு தயாரிப்பதற்கான சர்க்யூட் கூகிள் இணையத்தளத்திலிருந்து டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது. முதல் சோதனைக் குண்டுவெடிப்பு கோவாவிலும், இரண்டாவது சோதனைக் குண்டுவெடிப்பு மஹாராஷ்ட்ராவிலும் நடந்தது.

மர்மகோவா குண்டுவெடிப்பு நிகழ்ந்த தினத்தில் குற்றவாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்துள்ளனர். வெடிக்குண்டை வைப்பதற்கான பொறுப்பை மல்கோண்டா பாட்டீலும், யோகேஷ் நாயக்கும் ஏற்றுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோவா குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி சனாதன் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்"

கருத்துரையிடுக