13 மே, 2010

இனி ஃப்ளாப்பி டிஸ்கிற்கு குட்பை

டோக்கியோ:ஃப்ளாப்பி டிஸ்க்குகள் இனி நினைவில் மட்டும். ஜப்பான் நிறுவனமான ஸெமி ஃப்ளாப்பி டிஸ்க்குகளின் விற்பனையை இந்த வருட இறுதியில் நிறுத்த முடிவெடுத்துள்ளது.

தற்காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்குகளை எவரும் பயன்படுத்துவதில்லை. 3.5 இஞ்ச் அளவுடைய ஃப்ளாப்பி டிஸ்க்குகள் துவக்க கால கம்ப்யூட்டர் பயனீட்டாளர்களின் மாறாத நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கும்.

தற்போதைய இளைய தலைமுறைகளில் ஃப்ளாப்பி டிஸ்க்கை பார்க்காதவர்களும் உண்டு. ஃப்ளாப்பியை விட பல மடங்கு விவரங்களை(டேட்டா) சேகரிக்கும் திறன் கொண்ட யு.எஸ்.பி ஃப்ளாஷ் ட்ரைவ்கள் மற்றும் சி.டிக்களின் வருகை ஃப்ளாப்பிகளின் காணாமல் போக காரணமாயின.

ஒரு சிறுவிரல் அளவுடைய ஃப்ளாஷ் ட்ரைவில் ஒரு ஃப்ளாப்பியில் அடங்கும் டேட்டாக்களை விட ஆயிரம் மடங்கு டேட்டாக்களை சேகரிக்கும் திறன் உள்ளது.

தற்போதைய கம்ப்யூட்டர்களில் ஃப்ளாப்பிகளை செருகும் ட்ரைவ்கள் இல்லை. 2003 ஆம் ஆண்டே டெல் நிறுவனம் கம்ப்யூட்டர்களில் ஃப்ளாப்பி ட்ரைவ்களை மாற்றிவிட்டது. ஃப்ளாப்பி டிஸ்க்குகளின் விற்பனையில் சந்தையில் 70 சதவீதமும் ஜப்பான் நிறுவனமான சோனியுடையதாகும். சர்வதேச சந்தையில் 1981 ஆம் ஆண்டு சோனி ஃப்ளாப்பி டிஸ்குகளை அறிமுகப்படுத்தியது. சி.டிக்களும், ஃப்ளாஷ் ட்ரைவ்களும் வருகைக்கு முன்னர் ஃப்ளாப்பி டிஸ்குகள் தகவல் பரிமாற்றத்திற்கு பிரசித்திப் பெற்றிருந்தது.

தற்பொழுது எவரேனும் ஃப்ளாப்பியை உபயோகிப்பதையே நகைக்கதக்கதாக கருதுவோரும் உண்டு. ஆனாலும் ஜப்பான் மற்றும் இந்தியாவில் அது பிரபலமாகத்தான் இருந்தது. "நான் ஸ்கூலில் படிக்கும் பொழுதுதான் கடைசியாக ஃப்ளாப்பியை பயன்படுத்தினேன்" என்கிறார் ஒரு டெக்னாலஜி வெப்சைட்டின் எடிட்டர் காட் ஹன்னா ஃபோர்ட்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இனி ஃப்ளாப்பி டிஸ்கிற்கு குட்பை"

கருத்துரையிடுக