வாஷிங்டன்:அமெரிக்க மத்தியஸ்தராக செயல்படும் ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் அதனுடைய பொறுப்பு இரு நாடுகளுக்கும் தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாம தெரிவித்துள்ளார்.
'பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படுத்த எங்கிருந்து முயற்சிகள் நடந்தாலும் அதன் பொறுப்பு ஃபலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் தான். அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையிலிருந்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முடிந்தவரை இரு நாடுகளும் முன்வரவேண்டும்' என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடிய ஒபாமா வலியுறுத்தியதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியேற்ற நிர்மாணப் பணிகளை நிறுத்தவேண்டும் என்று அப்பாஸ் கோரியிருந்தார். இஸ்ரேலின் புறத்திலிருந்து பிரச்சனை ஏற்படாது என ஒபாம உறுதியளித்திருந்தார். ஆனால் ஜெருசலமிலும், சமீப பிரதேசங்களிலும் நிர்மாணப் பணிகளை அதிகரிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று மீண்டும் தெரிவித்தார்.
ஒபாமா அளித்த உறுதி அப்பாஸிற்கு திருப்தியை ஏற்படுத்தினாலும், இஸ்ரேலின் புதிய அறிவிப்பு மீண்டும் உரசலுக்கு காரணமாகும் என கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சமாதான பேச்சுவார்த்தை:பொறுப்பு ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கும் என ஒபாமா"
கருத்துரையிடுக