13 மே, 2010

சிலி அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு: பாக்.குடிமகன் மறுப்பு

சாண்டியாகோ:சிலியில் அமெரிக்க தூதரகத்தில் வெடிப்பொருட்களுடன் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் பாகிஸ்தானைச் சார்ந்த முஹம்மது ஸைஃபுர்ரஹ்மான் தனக்கு வெடிப்பொருட்களுடன் தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தன்னை அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுமென்றே அழைத்ததாகவும், தனது பையில் ஆடைகளல்லாத வேறொன்றுமில்லை என அவர் தெரிவித்தார்.

விசாவை புதுப்பிக்க தூதரகத்துடன் தொடர்புக் கொண்டேன். சுற்றுலாத் துறைத் தொடர்பான படிப்பிற்காக ஹோட்டல் ஒன்றில் இன்டேன்ஷிப் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது விசாவின் கால அவகாசம் முடிந்ததால் அதனை புதுப்பிக்க மனுச் செய்திருந்தேன். இதில் தான் பாகிஸ்தானி என்பதுக் குறித்த தனிப்பட்ட விபரங்களைச் சேர்த்தது தனக்கு வினையாக மாறிவிட்டது என அவர் தெரிவித்தார்.

தனது பெயரில் எவ்வித வழக்கும் இல்லை. மேலும் வெடிப்பொருட்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஸைஃபுர்ரஹ்மான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டைம்ஸ் சதுக்க தாக்குதலுக்கு திட்டமிட்டதின் பெயரில் அமெரிக்கா தூதரகங்கள் வெளிநாடுகளிலிலுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களின் பெயர் பட்டியலை தயாராக்கியுள்ளன.

சாண்டியாகோ நீதிமன்றத்தில் ஆஜரான ஸைஃபுர்ரஹ்மானை ரிமாண்ட் செய்தனர். இவருடைய அமெரிக்க விசாவை ரத்துச் செய்ததாக அமெரிக்க தூதர் போல் சைமண்ட்ஸ் அறிவித்தார்.

தெளிவான திட்டத்தோடுதான் ஸைஃபுர்ரஹ்மான் அமெரிக்க தூதரகத்திற்கு வந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி குற்றஞ்சாட்டுகிறார்.

ஸைஃபுர்ரஹ்மானின் மொபைல்ஃபோனில் டெட்ரில் என்ற வெடிப்பொருள் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிலி அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு: பாக்.குடிமகன் மறுப்பு"

கருத்துரையிடுக