வாஷிங்டன்:சீனாவில் செயல்படும் மனித உரிமை ஊழியர்களின் ஜி மெயில் அக்கவுண்டுகளில் வெளியேயுள்ளவர்கள் அத்துமீறி நுழைவதாக கூகிள் துணைத் தலைவரும் துணை கவுன்சலுமான நிக்கோலா வோங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கூகிளின் செயல்பாடு ஹாக்கரிகளின் தாக்குதல் மூலம் பாதுகாப்பு பிரச்சனையை சந்தித்து வரும் வேளையில் கூகிளின் ஜிமெயில் அக்கவுண்டுகளிலும் இத்தகைய அத்துமீறி நுழைவு நடந்து வருகிறது.
கூகிள் சீனாவில் தனது சேவையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இணையதளத்தின் ஒளிவு மறைவற்றத் தன்மையை அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், தூதரக நடவடிக்கைகள், வெளிநாட்டு உதவி, மனித உரிமை தலையீடுகள் ஆகிய பல்வேறு துறைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று வோங் தெரிவித்தார்.
ஆனால் சீனாவில் சேவையை நிறுத்துவதால் ஒரு பயனும் இல்லை என்றும், ஒரு வேளை அவர்கள்(சீனா) விரும்புவதே இதுவாக(சேவையை நிறுத்துவது)இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ப்ராட் ஷெர்மன் கூறுகிறார்.
பிரச்சனையை தீர்ப்பதற்கு நவீன தொழில் நுட்பத்தை கண்டறிவதற்கான முயற்சிச் செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்: on "சீனா:மனித உரிமை சேவகர்களின் ஜி மெயிலில் அத்துமீறி நுழைவு"
கருத்துரையிடுக