கெய்ரோ:ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலை பங்கேற்கச் செய்து அரப் லீக் நடத்தவிருந்த அதிகாரப் பூர்வமற்ற சமாதான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஃபலஸ்தீன் பிரதேசத்தில் 1500 குடியேற்ற வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதியளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சு வார்த்தையிலிருந்து வாபஸ் பெறுவதாக ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து அரப் லீக் இந்த முடிவை எடுத்துள்ளது.
அரப் லீக் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்திற்கு பிறகு அரப் லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா கெய்ரோவில் இம்முடிவை அறிவித்தார். "இஸ்ரேலின் நடவடிக்கை அரபுக்களை அவமானிப்பதற்கு சமமாகும். ஒரு ஃபலஸ்தீனிக்கும் இஸ்ரேலின் குடியேற்ற கட்டுமானத்தை ஆதரிக்க இயலாது. இந்த சூழலில் பேச்சுவார்த்தை வேண்டாம்" என்று, மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
"ஃபலஸ்தீன் பிரதிநிதித்துவம் இல்லாமல் பேச்சுவார்த்தை பயன் தராது. இஸ்ரேலின் அதிகரித்துவரும் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அடுத்த அரப் லீக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்" என்று மூஸா தெரிவித்தார்.
நான்கு மாதத்திற்குள் பேச்சுவார்த்தையை முடிக்கவேண்டும் என்று அரப் லீக் திட்டமிட்டிருந்தது.
நான்கு மாதத்திற்குள் பேச்சுவார்த்தையை முடிக்கவேண்டும் என்று அரப் லீக் திட்டமிட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை நிறுத்தி வைக்கவேண்டுமென்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த பொழுதிலும் குடியேற்ற கட்டுமானத்தில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
குடியேற்ற வீடுகளை கட்டுவதற்கான இஸ்ரேல் அரசின் தீர்மானம் அந்நாட்டில் சர்ச்சையாகியுள்ளது. தீவிர யூத கட்சியான ஷாஸின் தலைவர் தான் உள்துறை அமைச்சராக உள்ளார்.அவர் தான் குடியேற்ற கட்டுமானத்தை அறிவித்தார். இவருடைய தீர்மானத்தை வேறு சிலர் எதிர்க்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றம்; பேச்சுவார்த்தை நிறுத்தம் அரப் லீக்"
கருத்துரையிடுக