7 ஜூன், 2010

பிளாக்பெர்ரி செல்போனின் புதிய பரிணாமம்

மும்பை:மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.இது செல்போனாக மட்டுமல்லாமல்,ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.

இந்த பிளாக்பெர்ரி செல்போனின் பெயர் eUNO R10. வோடபோன் சேவையில் இந்த அதி நவீன வசதி இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில், கையடக்கமான, ஈசிஜி கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக் கொண்டு ஈசிஜி பார்க்கலாம்.பின்னர் இதன் முடிவுகளை வயர்லைன் ஏஅல்லது ஜிஎஸ்எம் செல்போன் மூலம் நமது டாக்டருக்கு அனுப்பி வைத்து அவருடையை ஆலோசனையைப் பெற முடியும்.

அதாவது எந்த லேபுக்கும்,டாக்டரிடமும்,மருத்துவமனைக்கும் செல்லாமல் நாமே ஈசிஜி பார்த்து ஆலோசனையை டாக்டரிடம் செல்போன் மூலமே பெற முடியும்.

இருப்பினும் பிளாக்பெர்ரி செல்போன்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.அதாவது நாம் எடுக்கும் அந்த ஈசிஜி அறிக்கை பிளாக்பெர்ரியின் சர்வருக்குப் போய் அங்கிருந்து டாக்டர் வைத்துள்ள பிளாக்பெர்ரிக்குப் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதி நவீன வசதி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.வோடபோன், பிளாக்பெர்ரி சேவைகளைக் கொண்டோர் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிளாக்பெர்ரி செல்போனின் புதிய பரிணாமம்"

கருத்துரையிடுக