16 அக்., 2010

ஓட்டுநர் இல்லாத வாகனம்

அக்.16:கடந்த நூற்றாண்டில் மிகப்பெரிய விஞ்ஞான தொழில்நுட்பமான இணையதளம் உலகை தன் வசப்படுத்தியது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வசப்படுத்துவது என்பதுக் குறித்த கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

எதனையும் உறுதியாக நம்மால் கூறவியலாது. பயோடெக்னாலஜி முதல் ஆரோக்கியத்துறை வரையும், கிரகங்களை நோக்கிய பயணம் முதல் பூமியின் அடிப்பகுதியை நோக்கிய பயணம் வரை பலவகையான ஆய்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில வெற்றியும் பெற்றுள்ளன.

தினந்தோறும் புதிய புதிய உபகரணங்களும், தொழில்நுட்ப வசதிகளும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில், உலகம் நம் கண் முன்னால் மாறிக்கொண்டே வருகிறது.

வரவிருக்கும் பெரிய மாற்றங்களில் ஒன்று வாகனங்களாகும். இவ்வளவு காலமும் வாகனங்களை ஓட்டுநர்களே ஓட்டி வந்தனர். அதாவது, ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டுமானால் ஒரு ஓட்டுநர் தேவை. ஓட்டுநர் இல்லையெனில் வாகனமில்லை.

ஆனால் இனிவரும் காலம் ஓட்டுநர்களில்லாத வாகனங்களின் காலமாகும். ஏற்கனவே சில நாடுகளில் ரெயில்கள் ஓட்டுநர் துணையின்றியே ஓடத் துவங்கிவிட்டன. ஆனால், இனி வரும் காலங்களில் சாலையில் ஓடும் வாகனங்களை ஓட்டுவதற்கு ஆள் தேவையில்லை. நாம் ஏறியிருந்தால் போதும், வாகனம் தானாகவே செல்லும்.

பயணத்தின் வழிமுறைகளையெல்லாம் வாகனம் பார்த்துக் கொள்ளும். ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் அதாவது செயற்கையான புத்தி வாகனங்களை சுயமாக கற்றுக் கொடுக்கிறது.

நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் எவ்வளவு நெரிசலான போக்குவரத்தைக் கொண்ட சாலையிலும் சுகமாக பயணிக்கலாம். பிரபல இணையதள தேடுதல் எந்திர நிறுவனமான கூகிள்தான் இத்தகைய வாகனங்களை பரிசோதனை முறையில் ஓட்ட துவங்கியுள்ளது.

அமெரிக்க சாலைகளில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இவ்வாகனம் சுயமாக ஓடியுள்ளது. மனிதர்களின் தலையீடு இதில் மிகக்குறைவே. ஒரேயொரு விபத்து மட்டுமே ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னலில் வாகனம் நின்றபொழுது பின்னால் வந்த வாகனம் மோதிய விபத்தாகும் அது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஓட்டுநர் இல்லாத வாகனம்"

கருத்துரையிடுக