16 அக்., 2010

செல்போன் ரோமிங் கட்டணம் முழுமையாக ரத்தாகிறது!

மும்பை,அக்.16:செல்போன்களுக்கான ரோமி்ங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

செல்போன் பயன்படுத்துபவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தங்கள் மாநிலத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது நிமிடத்துக்கு 2 ரூபாய் 40 காசை அவர்கள் ரோமிங் கட்டணமாக இழக்கிறார்கள்.

அது போல வெளி மாநிலங்களில் இருக்கும்போது தங்கள் செல்போனுக்கு வரும் ஒவ்வொரு அழைப்புக்கும் அவர்கள் 3 நிமிடத்துக்கு ஒரு ரூபாய் 75 காசு கொடுக்க வேண்டியதுள்ளது.

கடந்த ஆண்டு செல்போன் நிறுவனங்களுக்கு இடையே கட்டணத்தை குறைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது ரோமிங் கட்டணத்தையும் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு குறைத்தன.

ஆனாலும் ரோமிங் கட்டணம் பெரும் தலைவலியாகவே உள்ளது வாடிக்கையாளர்களுக்கு. சில செல்போன் நிறுவனங்களுக்கு சுமார் 20 சதவீத வருவாய் ரோமிங் கட்டணம் மூலமாகவே வருவதாக தெரிகிறது.

அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு இந்த ரோமிங் கட்டணம் கூடுதல் சுமையாக உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உயர் மட்டக்குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. இந்த உயர் மட்டக்குழு ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அரசிடம் கொடுத்துள்ளது.

அதில், செல்போன் பயன் படுத்துபவர்களின் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்து விடலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது 22 பகுதிகளாக உள்ள தொலை தொடர்பு சேவையை நாடெங்கும் ஒரே சேவை குடையின் கீழ் கொண்டு வர அந்த குழு அறிவுறுத்தியுள்ளது.

தேவைப்பட்டால் இந்தியாவில் 4 மண்டலங்களில் தொலை தொடர்பு சேவையை தொடரலாம் என்றும் அந்த குழு கூறியுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று விரைவில் ரோமிங் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதற்கு செல்போன் நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளுமா என்து கேள்விக்குறியாக உள்ளது.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "செல்போன் ரோமிங் கட்டணம் முழுமையாக ரத்தாகிறது!"

கருத்துரையிடுக