புதுதில்லி,அக்.17:இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நம்பகமான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய டேவிட் ஹெட்லிக்கு பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பிருப்பது அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு முன்பே தெரியும் என "வாஷிங்டன் போஸ்ட்" இதழில் அண்மையில் செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்தச் செய்தி தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர், "இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நம்பகமான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். டேவிட் ஹெட்லி தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் பற்றி இப்போது கருத்துத் தெரிவிக்க முடியாது. அந்தச் செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டே பிறகு எதையும் கூற முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானது என்றும் ரோமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

0 கருத்துகள்: on "இந்திய பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் தொடர்பான நம்பகமான உளவுத் தகவல்களை தெரிவித்தோம்: அமெரிக்கா"
கருத்துரையிடுக