எவ்வளவு உயரமான மலை! என்ன அழகான ஓவியம்! என வியந்து, அது பற்றி தகவல் அறிய விரும்புபவர்கள், அதை மொபைலில் படமெடுத்தாலே போதும், தகவல்களை உடனே அறிந்து கொள்ளலாம். இதற்காக, கூகுள் நிறுவனம், பிரத்தியேக மொபைல் பயன்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில், "கூகுள்ஸ்' என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்த, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர், மொபைல் இணையதளங்களில் தேடுதல் நடத்தலாம். இதற்காக, வார்த்தைகளோ, கீ வேர்டுகளோ டைப் செய்ய தேவையில்லை. அந்த பொருளை மொபைல் போனில் படம் எடுத்தாலே போதுமானது. அதுபற்றிய தகவல்கள் மொபைல் போனில் உடனே வந்துவிடும்.
கூகுள் நிறுவனத்தின் மொபைல் போன் பயன்பாட்டு பிரிவு துணை தலைவர் விக் கண்டோத்ரா கூறியதாவது: "புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள, 'கூகுள்ஸ்' அப்ளிகேஷன், படப் போஸ்டர்கள், வைன் லேபிள்கள், கலைப் பொருட்கள், கட்டடங்கள், நில அடையாளங்கள் உட்பட சில குறிப்பிட்ட பிரிவில் சிறப்பாக செயல்படும். தற்போது, இதன் பயன்பாடு, குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தகவல்களையும் அறியும் வகையில், இதை விரிவுபடுத்துவதே, எங்கள் நோக்கம். இது ஒரு துவக்கமே". இவ்வாறு விக் கண்டோத்ரா கூறினார்.
0 கருத்துகள்: on "கூகுள் போன்: படமெடுத்தாலே உடனே விவரம் அளிக்கும்"
கருத்துரையிடுக