அமெரிக்காவைச் சார்ந்த பிரபல தேடுபொறி(search engine) சேவையாளரான கூகிள் தனது சேவையை சீனாவில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தனது கணினி நினைவகத்திலிருந்து தகவல்களை திருடுதல்(Hack), மனித உரிமை ஊழியர்களின் ஜி மெயில் மின்னஞ்சல்களை திருட்டுத்தனமாக ஆராய்வது அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்வது போன்ற சீன அரசு அதிகாரிகளின் நடவடிக்கையின் காரணமாக சீனாவில் தனது சேவையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூகிள் முன்னறிவிப்பு செய்துள்ளது.
சுமூகமான செயல்பாடுகள் தொடர்வது தொடர்பாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தபோவதாகவும் அதில் தோல்வி ஏற்பட்டால் சேவை நிறுத்தப் போவதாகவும் கூகிளின் வழக்கறிஞர் டேவிட் ட்ரமெண்ட் கூறினார்.
சீன அரசின் உத்தரவிற்கிணங்க தேடல் முடிவுகள்(search results) சென்சார் செய்தபிறகு கிடைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இச்செய்தியை கூகிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜி மெயில் உள்ளிட்ட இணையதள சேவைகளுக்கு எதிராக சீனாவில் ஹேக் செய்வது, பிஷிங்(phishing) செய்வது ஆகியன வழக்கமாக நடைபெறுவதாக ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவங்களை குறித்து சீன அரசு விசாரணை நடத்தவேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே கோரியிருந்தது. மனித உரிமை ஊழியர்களின் ஈ-மெயில் அக்கவுண்டுகளுக்கு எதிராகத்தான் இத்தகைய செயல்பாடுகள் பெரும்பாலும் நடைபெறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சீனாவில் தனது சேவையை நிறுத்தப் போவதாக கூகிள் அறிவிப்பு"
கருத்துரையிடுக