உலகின் முன்னனி கணினி நிறுவனமான ஆப்பிள், ஐ-பேட் என்ற பெயரில் புது வகையான கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது உலக அளவில் பிரபலமான செல்போனாக விளங்கும் ஐ-போனை விட அளவில் சற்று பெரிதாக இருக்கும் இந்த ஐ-பேடில் கணினிக்குறிய அனைத்து வசதிகளும் இருக்கும்.
சுமார் 430 முதல் 850 டாலர்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ள ஐ-பேட் ஜுன் மாதத்தில் கணினி சந்தையில் கிடைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MS-office போன்று இதற்கென்று I-Works என்ற பிரத்யோகமான மென்பொருளையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள கணினியில் இருக்கும் முக்கிய சிறப்புகளான புகைப்பட கருவி மற்றும் ப்ளாஷ் இல்லாதது பெரும் குறையே. எனினும் இக்கணினியின் வடிவமைப்பு வாடிக்கையாளர்களை வாங்க தூண்டும் என அறிமுக விழாவில் பேசிய தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறினார்.
0 கருத்துகள்: on "ஐ-பேட் என்ற பெயரில் புது வகையான கணினி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடு"
கருத்துரையிடுக