காபூல்:ஆப்கான் விவகாரத்தை விவாதித்து முடிவெடுக்க லண்டனில் நேற்றுக்கூடிய சர்வதேச நாடுகளின் மாநாடு வீணானது என தாலிபான் கூறியுள்ளது.
ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாமல் ஒரு சமாதான பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் தெளிவுப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு ராணுவம் ஆப்கானை விட்டும் வெளியேறினால் மட்டுமே பிரச்சனைகள் தீரும்.
குவாண்டனாமோ,பக்ராம் உள்ளிட்ட அமெரிக்க சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தாலிபான்களையும் விடுவிக்கவேண்டும். அனைத்து தாலிபான் போராளிகளையும் ஐ.நா வின் கருப்புப்பட்டியலிருந்து நீக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "உச்சிமாநாடு வீண்: தாலிபான்"
கருத்துரையிடுக