பெங்களூரு:மரபணுவை மாற்றியமைத்தல் மூலம் உருவாக்கப்பட்ட விதைகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக BT Brinjal என்றழைக்கப்படும் மரபணு கத்தரிக்காயை வணிகப்படுத்தும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் முயற்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலாளர் ரியாஸ் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மரபணு பயிர்களை பல்வேறு நாடுகள் தடை செய்திருந்த போதிலும் பன்னாட்டு கம்பெனிகளின் செல்வாக்கினால் இந்திய விவசாயத்துறை அமைச்சகம் இதனை இந்திய சந்தைகளில் முன்னேற்றப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த மரபணுப்பயிர்கள் அதனை உபயோகிப்போரின் உடல் நலனை கடுமையாக பாதிப்பதோடு இந்நாட்டில் சமூக-பொருளாதார சூழலையும் அதிகம் பாதிக்கும். இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமே இத்தகைய BT பருத்திப்பயிர்களை சந்தைப்படுத்தியதுதான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
மரபணு பயிர்களை அறிமுகப்படுத்துவதால் உள்ளூர் விவசாய சந்தையின் கட்டுப்பாடு ஏகாதிபத்திய சக்திகளால் இயக்கப்படும் மரபணு பயிர் உற்பத்தியாளர்களுக்கு சென்றுவிடும். BT கத்தரிக்காயை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு இந்திய அரசு ஆதரவு அளிப்பதன்மூலம் ஏகாதிபத்திய சக்திகளின் செல்வாக்கிற்கு அடிபணியும் மற்றொரு நிகழ்வாக முடியும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க காரணம் அவர்கள் மக்களுக்கு ஆதரவான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்ததால்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு BT மரபணுக்கத்தரிக்காயை இந்திய சந்தைகளில் வணிகப்படுத்த முயற்சித்தால் அது இந்த நாட்டு குடிமக்களுக்கு செய்யும் துரோகமாம் மட்டுமன்றி ஏகாதிபத்திய சக்திகளால் இயக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பங்களை பாதுகாப்பதில் தான் கடமையாற்றுகிறது என்பதும் நிரூபணமாகும்.
இந்தியா முழுவதும் பல்வேறு சமூக விவசாய அமைப்புகள் நடத்திய போராட்டம் இந்நாட்டு குடிமக்களின் மரபணு பயிர்களை இந்திய சந்தைகளில் அறிமுகப் படுத்துவதற் கெதிரான அதிருப்தியை வெளிப்படுத்தியது."இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source:twocircles.net
குறிப்பு: BT Brinjal என்றால் பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis) என்ற பாக்டீரியாவை உட்செலுத்தப்பட்ட விதையிலிருந்து உருவான கத்தரிக்காயாகும்.
0 கருத்துகள்: on "மரபணு கத்தரிக்காயை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முயற்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்"
கருத்துரையிடுக