ஆப்கானிலஸ்தான் காபூலில, அமெரிக்கப் படைத்தளம் அருகே தனது மகனுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த மதகுருவை அமெரிக்கத் துருப்பினர் சுட்டுக் கொன்றுள்ளனர். தற்கொலைப் போராளிகளின் தாக்குதல் அதிகம் நடைபெறுவதால் தவறுதலாய் இத்தாககுதல் நடைபெற்றுவிட்டதாக NATO தெரிவித்துள்ளது.
முஹம்மத் யூனுஸ் எனும் 36 வயது மதகுரு அவரது மகனொருவனுடன் காரில் நெடுஞ்சாலையை நெருங்கியதாக போலீஸும் சாட்சிகளும் தெரிவித்தனர். அவர் பயணம் செய்த காரை குண்டுகள் துளைத்தன. மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியிலேயே யூனுஸ் மரணமடைந்தார். அவரது மகன் காயமின்றித் தப்பித்து விட்டான்.
இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க படைத்தளத்திற்கு வெளியே ஆப்கன் மக்கள் திரண்டனர். உள்ளூர் தலைவர்களிடம் பேசி இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் இதுகுறித்து விசாரனைக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
யூனுஸின் சகோதரர் யூசுப், எத்தகைய நஷ்ட ஈடும் இழந்த உயிருக்கு ஈடாகாது என்று தெரிவித்துள்ளார்.
source:inneram
0 கருத்துகள்: on "அமெரிக்கத் துருப்பினர் சுட்டு மதகுரு மரணம்"
கருத்துரையிடுக