11 நவ., 2009

"லவ் ஜிஹாத்" முஸ்லிம் விரோத பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நடைப்பெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு

கோழிக்கோடு: "லவ் ஜிஹாத்" என்ற பெயரால் சமூக மறுமலர்ச்சியின் மதிப்பை தகர்த்து ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் குறுகிய மனப்பான்மையை உருவாக்கவும், முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் நடைபெறும் சதித்திட்டங்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்தது கடந்த 9/11/09 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரச்சார மாநாடு.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நீண்ட பேரணியிலும், பொது மாநாட்டிலும் அணிதிரண்ட மக்கள் வெள்ளம் பத்திரிகை மற்றும் சங்கபரிவார பயங்கரவாதத்திற்கெதிராக சமுதாயத்தில் பற்றி எரியும் எதிர்ப்பை தெரிவித்தனர். "மதம் மாற்றம் குற்றமல்ல" என்ற முழக்கத்தை முன்வைத்துதான் மாநாடு நடைபெற்றது.
முஸ்லிம் சமுதாயத்தை பொதுசமூகத்திலிருந்து புறக்கணிப்பதற்கு சங்க்பரிவார், ஜாதி அமைப்புகள், பத்திரிகைகள் (குறிப்பாக மலையாள மனோராமா என்ற நாளிதழ்) உள்ளிட்டோரின் சதித்திட்டங்களை ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்று மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண் ஆஃப் இந்தியா கேரள மாநிலத்தலைவர் நஸிருத்தீன் எழமரம் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். உள்ளுக்குள் நடக்கும் பிரச்சனைகளை மறக்கடிப்பதற்காக ஹிந்து சமூகத்தில் மதவெறியை தூண்டிவிட சங்க்பரிவார் தேர்ந்தெடுத்ததுதான் "லவ் ஜிஹாத்" சர்ச்சை என்று அவர் கூறினார். மதமாற்றம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்ற அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்கவும், இதன்பெயரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான எல்லா உதவிகளையும் செய்யவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சங்க்பரிவாரிடமிருந்து மாதந்தோறும் கூலி வாங்கும் பத்திரிகையாளர்கள்தான் "லவ் ஜிஹாத்" என்ற கட்டுக்கதைகளை பிரசுரிக்கின்றனர் என்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ கேரள மாநில தலைவர் டாக்டர் எம்.எஸ்.ஜெயபிரகாஸ் கூறினார். மலையாளத்தின் நல்ல காலைவேளைகளை வகுப்பு வெறியை தூண்டும் பொய் பிரச்சாரங்கள் மூலம் கொடூரமான இரவுகளாக்க மலையாள மனோரமாவும் மற்ற சிலரும் முயல்வதாக அவர் கூறினார். மத மாற்றத்தின் பெயரால் முஸ்லிம் மையங்களில் ரெய்டு நடத்த தயாராகும் அமைப்புகள் "தீண்டத்தகாதோருக்கு இஸ்லாம்" போன்ற ஆரம்பகால ஈழவ சமுதாய வெளியீடுகளை மீண்டும் ஒருமுறை மீள் வாசிக்கவேண்டும் என்று டாக்டர்.ஜெயபிரகாஷ் மேலும் கூறினார்.
"லவ் ஜிஹாத்" முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான சர்வதேச அளவிலான சதித்திட்டத்தின் ஒருபகுதி என பத்திரிகையாளர் ஓ.அப்துல்லாஹ் தெரிவித்தார். பெண்களை மத-ஜாதி என்ற குறுகிய கண்ணோட்டத்தில் கட்டிப்போடவும் சமுதாய மறுமலர்ச்சியை தகர்ப்பதற்கான ஹிந்து-கிறிஸ்தவ ரகசிய சதித்திட்டம்தான் "லவ் ஜிஹாத்" என்ற பொய் பிரச்சாரத்தின் பின்னணி என தலித் மகா சபா கண்வீனர் கெ.எம். சலீம் குமார் கூறினார். ஹிட்லர் மற்றும் கோல்வால்கரின் விஷம்கலந்த சிந்தனைகள்தான் "லவ் ஜிஹாத்" என்ற குற்றச்சாட்டிற்கு பின்னால் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக நன்கு திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை சங்க்பரிவாரும், பத்திரிகைகளும் நடத்தி வருவதாக தேஜஸ் பத்திரிகை ஆசிரியர் பேராசிரியர் பி.கோயா கூறினார். பாலியல் பலாத்காரங்களில் நன்கு பயிற்சி பெற்ற சங்க்பரிவாரம் குஜராத்திற்கு பின்னர் "லவ் ஜிஹாத்" பொய்பிரச்சாரத்தின் மூலமும் அதனை நிரூபிப்பதாக கூறிய பேராசிரியர் கோயா பிறருக்காக அடி உதைகளை வாங்க முதுகை காட்டக்கூடியவர்கள் முஸ்லிம்கள் என்ற தவறான எண்ணத்தை பத்திரிகைகளும், சங்க்பரிவாரமும் கைகழுகவேண்டும் என்றும் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல்ஹமீது, பொருளாளர் கெ.ஹெச்.நாஸர், மாவட்டத்தலைவர் பேராசிரியர் முஹம்மது அஹ்மத் நத்வி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on ""லவ் ஜிஹாத்" முஸ்லிம் விரோத பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நடைப்பெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு"

கருத்துரையிடுக